• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • அறிவியல் போட்டியில் வெற்றிப்பெற்று நாசாவிற்கு செல்லும் மதுரை டீக்கடைக்காரர் மகள்!

அறிவியல் போட்டியில் வெற்றிப்பெற்று நாசாவிற்கு செல்லும் மதுரை டீக்கடைக்காரர் மகள்!

மாணவி தன்யா

மாணவி தன்யா

இந்த வாய்ப்பு மூலம் அப்துல்கலாம் எவ்வாறு படிப்படியாக முன்னேறினாரோ அதேபோல் நானும் முன்னேறுவேன் என தன்யா கூறுயுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அறிவியல் போட்டியில் வெற்றிப்பெற்ற தமிழக மாணவி நாசாவிற்கு செல்ல இருக்கிறார்.

அமெரிக்க நிறுவனமான go4guru என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட 2019-ம் ஆண்டிற்கான அறிவியல் போட்டி நடைபெற்றது. இந்திய அளவில் வெற்றி பெற்ற மூன்று பேரில் மதுரையை சேர்ந்த மகாத்மா மாண்டிசரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் தன்யா தஸ்னம் வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அமெரிக்க பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த வாய்ப்பு மூலம் அப்துல்கலாம் எவ்வாறு படிப்படியாக முன்னேறினாரோ அதேபோல் நானும் முன்னேறுவேன் என தன்யா கூறுயுள்ளார்.

இதுகுறித்து தன்யாவின் தந்தை ஜாபர் உசேன் பேசுகையில், நான் மதுரையில் அழகர் கோயில் அருகே சிறிய டீக்கடை வைத்திருக்கிறேன். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக இணையதளத்தில் நாசாவிற்கு செல்ல தேர்வு எழுதினார் தன்யா. அப்துல் கலாம் பற்றிய கட்டுரையைதான் என் மகள் அந்த போட்டித் தேர்வில் எழுதி இருந்தார் என்று கூறினார்.

மேலும் 11,350 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். என் மகள் வெற்றி பெறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தற்பொழுது தமிழ்நாடு அளவில் முதல் இடம் பிடித்த என் மகள் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய இருக்கிறார் என்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என கூறியுள்ளார் ஜாபர் உசேன்.

இதேபோல கடந்த முறை நாசா செல்வதற்கான தேர்வில் வெற்றி பெற்று அமெரிக்கா சென்று வந்த பவளர்ஸ் ஜான் பேசுகையில் ’தெய்வத்தின் அருளால் நான் இவ்வளவு பெரிய வாய்ப்பை பெற்று அமெரிக்காவின் விஞ்ஞானிகளை சந்தித்து விட்டு வந்தேன். அமெரிக்க விஞ்ஞானிகள் பல்வேறு தகவல்களை எனக்கு தந்தார்கள் ’ என்று தெரிவித்தார்.

மேலும், இந்தியா, அமெரிக்க போன்ற நாடுகளில் பணியாற்றுவதை விட எனக்கு எதிர்காலத்தில் அனைவருக்கும் பொதுவான அறிவியல் ஆராய்ச்சியாளராக பணியாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை எனத் தெரிவித்தார் பவளர்ஸ் ஜான்.

இது போன்ற அறிவியல் வளர்ச்சிகளில் முன்னேற்றம் அடைந்து வரும் இந்திய மாணவர்களை நேரில் கண்டு தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துகொள்ள சென்னை வந்துள்ள நாசா விண்வெளி வீரர் டான் ஜான்சன் பேசுகையில், மாணவர்கள் மிகப் பெரிய கனவுகள் காண வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், அந்த கனவுகளை அடைவதற்கு கடுமையாக போராட வேண்டும். அது எப்படிப்பட்ட கனவாக இருந்தாலும் சரி நிச்சயமாக நீங்கள் முயற்சி செய்தால் அதற்கான பலனை அடைய முடியும். அடுத்த தலைமுறை விஞ்ஞானியான மாணவர்கள் அதை விடுவிக்க தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: