ஹோம் /நியூஸ் /கல்வி /

பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் இறுதிப் பட்டியல் வெளியீடு..!

பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் இறுதிப் பட்டியல் வெளியீடு..!

(கோப்புப் படம்)

(கோப்புப் படம்)

இந்த ஆண்டு ,முதல் முறையாக 10மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் புதிய பாபாடத்திட்ட அடிப்படையில் தேர்வெழுதுகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழ்நாடு மற்றும் புதுவையில் 10 ,11 ,12-ம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரம் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு முதல் முறையாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் புதிய பாடத்திட்ட அடிப்படையில் தேர்வெழுதுகின்றனர். 10-ம் வகுப்பில். 9,45,006 பேர் தேர்வு எழுதுகின்றனர் அவர்களுள் மாணவர்கள் 4,74,844 பேரும், மாணவிகள் 4,70,155 பேரும் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு முடிவுகள் மே 4-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளது.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,26,119 பேர் எழுதுகின்றனர் அவர்களுள் மாணவர்கள் 3,85,567 பேரும், மாணவிகள் 4,40,252 பேரும் எழுதுகின்றனர். இவர்களுள் சிறைவாசிகள் 100 பேர் தேர்வெழுதுகின்றனர். தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதி வெளியாக உள்ளது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை தமிழகம் மற்றும் புதுவையில் 8,16,359பேர் எழுதுகின்றனர். மாணவர்கள் 3,74,747 பேரும், மாணவிகள் 4,41,612 பேரும், சிறைவாசிகள் 62 பேரும் தேர்வினை எழுத உள்ளனர். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகின்றது.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Public exams