ஆல் பாஸ்... 4 மாதங்களைக் கடந்தும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கவில்லை!

மாதிரி படம்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் எவ்வாறு வழங்குவது என்பதில் திணறி வரும் நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது சவாலாக உருவெடுத்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
10-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என அரசு அறிவித்து 4 மாதங்களைக் கடந்தும் இதுவரை மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படாமல் உள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் எவ்வாறு வழங்குவது என்பதில் திணறி வரும் நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது சவாலாக உருவெடுத்துள்ளது.

கொரொனோ பெருந்தொற்று காரணமாக பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து அதன் பரிந்துரை அடிப்படையில் ஆல் பாஸ் செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

Also read... 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்கப்படும்?

இந்த நிலையில், 4 மாதங்களைக் கடந்தும் இதுவரை 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்கப்படும் என்பது குறித்து அரசிடம் இருந்து தெளிவான முடிவு வரவில்லை.

இதனை தொடர்ந்து தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்த பரிந்துரை அளிக்க குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. எனினும் மதிப்பெண் கணக்கிட்டு வழங்குவது என்பது சவாலான ஒன்றாக அரசுக்கு உருவாகி உள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: