பள்ளிகள் திறப்பதை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு!

பள்ளிக் கல்வித்துறை வளாகம்

பள்ளிகள் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்டம்தோறும் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

  • Share this:
பள்ளிகளை திறப்பதற்கு முன்கூட்டியே பள்ளிகளை ஆய்வு செய்வதற்கும், மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மாவட்ட வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பள்ளிகளில்  கடைபிடிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன அதனைத் தொடர்ந்து நோய் பாதிப்பு அதிகரித்த நிலையில், மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனை தொடர்ந்து கொரோனா தொற்று தற்போது குறைந்து வரக்கூடிய நிலையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Also read: பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக்கல்வித் துறை முக்கிய முடிவு

இந்த நிலையில் பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே கண்காணிக்கவும், பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யவும், மாவட்ட வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த இயக்குனர்கள் இணை இயக்குனர்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்குரிய உத்தரவு ஒரிரு தினங்களில் வெளியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Published by:Esakki Raja
First published: