Home /News /education /

இந்திய அஞ்சல்துறை சார்பில் "இந்தியா 2047" கட்டுரை போட்டி: முதற் பரிசு ரூ.50,000

இந்திய அஞ்சல்துறை சார்பில் "இந்தியா 2047" கட்டுரை போட்டி: முதற் பரிசு ரூ.50,000

காட்சிப் படம்

காட்சிப் படம்

இந்த கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் 044-28543199 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    “இந்தியா 2047-க்கான தொலைநோக்கு” என்ற மையப் பொருளில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியை அஞ்சல்துறை நடத்துகிறது.

    இந்த கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் 044-28543199 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சலக தலைமை அஞ்சல் அதிகாரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    அந்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

    “இந்தியா 2047-க்கான தொலைநோக்கு” என்ற மையப் பொருளில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியை அஞ்சல்துறை நடத்துகிறது. இதற்கான கடிதத்தை அனுப்புவதற்கு 31.10.2022 கடைசி நாளாகும். ஆங்கிலம் / இந்தி / தமிழ் மொழிகளில் எழுதப்பட்ட கடிதங்கள் முதன்மை தலைமை அஞ்சல் அதிகாரி, தமிழ்நாடு சரகம், சென்னை 600 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கையெழுத்தில் உள்ள கடிதங்கள் மட்டுமே ஏற்கப்படும். “01.01.2022 அன்று 18 வயதிற்கும் கீழே / மேலே இருக்கிறேன் என நான் சான்றளிக்கிறேன்” என்ற வடிவில் வயதை நிரூபிக்கும் சான்றிதழை பங்கேற்பாளர்கள் அளிக்க வேண்டும்.













    18 வயது வரைஇன்லாண்ட் லெட்டர் (Inland Letter Category) வகைமையில் 500 வார்த்தைகளுக்கு மிகாமல்

    உறையிலிட்டு அனுப்பும் வகைமையில் (Envelope Category) 1000 வார்த்தைகளுக்கு மிகாமல்

     
    18 வயதுக்கு மேல்இன்லாண்ட் லெட்டர் வகைமையில் 500 வார்த்தைகளுக்கு மிகாமல்

    உறையிலிட்டு அனுப்பும் வகைமையில் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல்

     

    சரக அளவில் ஒவ்வொரு வகைமைக்கும் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை



















    பரிசு வகைமைபரிசுத் தொகை
    ஒவ்வொரு வகைமைக்கும் முதல் பரிசுரூ.25,000/- (ரூ.இருபத்தைந்தாயிரம் மட்டும்)
    ஒவ்வொரு வகைமைக்கும் இரண்டாம் பரிசுரூ.10,000/- (ரூ.பத்தாயிரம் மட்டும்)
    ஒவ்வொரு வகைமைக்கும் மூன்றாம் பரிசுரூ.5,000/- (ரூ.ஐந்தாயிரம் மட்டும்)

    தேசிய அளவிலான ஒவ்வொரு வகைமைக்கும் வழங்கப்படும் பரிசு:



















    பரிசு வகைமைபரிசுத் தொகை
    ஒவ்வொரு வகைமைக்கும் முதல் பரிசுரூ.50,000/- (ரூ.  ஐம்பதாயிரம்  )
    ஒவ்வொரு வகைமைக்கும் இரண்டாம் பரிசுரூ.25,000/- (ரூ.இருபத்தைந்தாயிரம் மட்டும்)
    ஒவ்வொரு வகைமைக்கும் மூன்றாம் பரிசுரூ.10,000/- (ரூ.பத்தாயிரம் மட்டும்)

    இதையும் வாசிக்க:  தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் தொழிற் பழகுனர் மேளா: 5ம் வகுப்பு தேர்ச்சி போதும்

    முன்னதாக, நாட்டின் 75வது சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர், "75-ஆவது ஆண்டு ஒரே ஒரு நிகழ்ச்சியோடு முற்று பெறக்கூடாது. புதிய தீர்வுகளுக்கு நாம் அடித்தளமிட்டு, புதிய தீர்வுகளுடன் நாம் முன்னேற வேண்டும். இன்று தொடங்கி அடுத்த 25 ஆண்டுகளில் நாம் சுதந்திரத்தின் நூற்றாண்டை கொண்டாடும் தருணம் வரை புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான அம்ருத் காலமாக விளங்கும். இந்த அம்ருத் காலகட்டத்தில் நமது தீர்வுகளை நாம் அடைவதன் வாயிலாக இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டை பெருமையுடன் நாம் கொண்டாட முடியும்.

    இதையும் வாசிக்க 13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி! அன்புமணி ராமதாஸ்

    2047- ஆம் ஆண்டின் பிரம்மாண்ட மற்றும் ஒழுக்கமான இந்தியாவிற்கு நீங்கள் அடித்தளம் அமைக்க வேண்டும். ஒவ்வொரு துறை மற்றும் ஒவ்வொரு அளவிலும் இந்தியா மாற்றத்தை சந்தித்து வரும் தருணத்தில், நீங்கள் உங்கள் பணியைத் துவங்கவிருக்கிறீர்கள். உங்கள் பணி காலத்தின் அடுத்த 25 ஆண்டுகள், இந்தியாவின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானதாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

    மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்கள் 2047-க்கான லட்சியத்தை அடைவதற்கான சிந்தனைகளை திட்டமிட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இந்திய அஞ்சல் துறை " இந்தியா 2047-க்கான தொலைநோக்கு" என்ற தலைப்பில் எழுத்துப் போட்டியை அறிவித்துள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: India post, School

    அடுத்த செய்தி