பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக்கல்வித் துறை முக்கிய முடிவு

மாதிரி படம்

செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே கண்காணிக்க மாவட்டம்தோறும் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

  கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பல பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டுமென தெரிவித்தனர். கொரோனா தொற்றும் தமிழகத்தில் குறைந்து வந்த நிலையில் பள்ளிகளை திறப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வருடன் ஆலோசனை நடத்தினார்.

  Also Read : பள்ளி திறப்பு குறித்த உத்தரவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்க - முன்னாள் அமைச்சர்

  இந்நிலையில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்படும். இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தனர். பள்ளிகள் திறப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.

  Also Read : 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்று வெளியீடு - ஆகஸ்ட் 31 வரை பதிவிறக்கம் செய்யலாம்

  இந்நிலையில் பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே கண்காணிக்கவும், பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க படுவதை உறுதி செய்யவும், மாவட்ட வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். பள்ளிக்கல்வித் துறையை சேர்ந்த இயக்குனர்கள் இணை இயக்குனர்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் . இதற்குரிய உத்தரவு ஒரிரு தினங்களில் வெளியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: