உயர்கல்வியில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு சட்ட மசோதாவை அமல்படுத்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வித்துறை உத்தரவு..

உயர்கல்வியில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு சட்ட மசோதாவை அமல்படுத்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வித்துறை உத்தரவு..

பள்ளிக் கல்வித்துறை

அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதலும் அளித்திருந்தார். அதன்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை பின்பற்ற உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

  கல்வி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளிலும் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டையும், சீர்மரபினருக்கான 7 சதவீத உள்ஒதுக்கீட்டையும், எஞ்சிய பிரிவினருக்கான 2.5 சதவீத இடஒதுக்கீட்டையும் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இடஒதுக்கீடு கோரி, பாமக மற்றும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைப்பினர், பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். குறிப்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் இக்கோரிக்கை குறித்து தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க... வேகமெடுக்கும் கொரோனா: ரெம்டெசிவர் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: