2022ம் கல்வி ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி நர்சிங் (Post Basic),பி.எஸ்சி நர்சிங் (துணை மருத்துவம்) ஆட்சேர்ப்பு அறிவிப்பை புதுடெல்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும்,தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பி.எஸ்சி நர்சிங்:
10+2 பாடத் திட்ட முறையில் தோன்றி/தேர்ச்சி பெற்ற மாணவர்களும், அல்லது ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களைக் கொண்ட சமமான கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். சமமான கல்வியில் பொதுப் பிரிவினர்/ பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர், இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏனைய வகுப்பினர் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
பி.எஸ்சி நர்சிங் (துணை மருத்துவம் - Para Medical Course) :
10+2 பாடத் திட்ட முறையில் தோன்றி/தேர்ச்சி பெற்ற மாணவர்களும், அல்லது ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களைக் கொண்ட சமமான கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். சமமான கல்வியில் பொதுப் பிரிவினர்/ பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர், இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். ஏனைய வகுப்பினர் 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
ரிஷிகேஷ் எய்ம்ஸ் நிறுவனத்தில் இளநிலை ரேடியோலாஜி மற்றும் இமேஜிங் மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் சிபிஎஸ்இ 12ம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்று ரேடியோலாஜி மற்றும் இமேஜிங் மருத்துவ தொழிநுட்பத்தில் பட்டயப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
(அல்லது)
10+2 பாடத் திட்ட முறையில்அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்று, ரேடியோலாஜி மற்றும் இமேஜிங் மருத்துவ தொழிநுட்பத்தில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பி.எஸ்சி நர்சிங் (Post Basic) :
10+2 பாடத் திட்ட முறையில்அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். 1986 முந்தைய காலங்களில் 10+1 பாடத்திட்ட முறையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்திய செவிலியர் மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பொது செவிலியர் மற்றும் தாதியர் (Diploma in General Nursing and Midwifery பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மாநில செவிலியர் மன்றத்தில் செவிலியராக/ தாதியராக பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆண் செவிலியராக இருந்தால், தாதியர் பயிச்சிக்குப் பதிலாக, O.T. Techniques, Ophthalmic Nursing, Leprosy Nursing, TB Nursing, Psychiatric Nursing, Neurological and Neuro Surgical Nursing, Community Health Nursing, Cancer Nursing, Orthopaedic Nursing ஆகிய ஏதேனும் ஒரு பிரிவிகளில் 6 மாதகாலம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
முக்கியமான நாட்கள்:
முதற்கட்ட ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை: ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 14ம் தேதி வரை.
முதற்கட்ட விண்ணப்ப செயல்முறை குறித்த சமீபத்திய நிலவரங்கள் (ஏற்கப்பட்டது/நிராகரிக்கப்பட்டது தொடர்பான நிலவரங்கள்) : 2022, மே 17ம் தேதி
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களில் உள்ள விவரங்களைத் திருத்துவதற்கான கால அவகாசம் : 2022, மே 23ம் தேதி
உறுதி செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கான விண்ணப்ப எண் தயாரிப்பது : மே 5 முதல் மே 27 வரை.
விண்ணப்ப எண் பெற்றுக் கொண்ட தேர்வர்கள் விண்ணப்பிக் கட்டணம் மற்றும் தேர்வு மையங்கள் தேர்ந்துதெடுக்கும் நாள் : மே 5 முதல் மே 27 வரை.
விண்ணப்பங்கள் இறுதி செய்யப்படும் நாள் ( விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களும் அறிவிக்கப்படும்) : ஜூன் 6
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் திருத்தம் கோரி விண்ணப்பிக்க வேண்டிய நாள் : ஜூன் 7, மாலை 6 மணி வரை.
அதற்கு பின் வரும் எந்தவொரு கோரிக்கையும் பரிசீலிக்கப் பட மாட்டாது.
அனுமதி சீட்டு:
பி.எஸ்சி நர்சிங் தேர்வுக்கான மின்னணு அனுமதிச் சீட்டு வெளியாகும் நாள்: ஜூன், 11
ஏனைய தேர்வுகளுக்கான மின்னணு அனுமதிச் சீட்டு வெளியாகும் நாள் : ஜூன், 13
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்
பி.எஸ்சி நர்சிங்: 2022 ஜூன்,18
பி.எஸ்சி நர்சிங் (Post Basic) மற்றும் பி.எஸ்சி நர்சிங் (துணை மருத்துவம்) : 2022 ஜூன் 25.
மேலும், விவரங்களுக்கு: AIIMS-B.Sc. (H) Nursing/B.Sc. Nursing (Post-Basic)/B.Sc. (Paramedical Courses)-2022
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.