ஹோம் /நியூஸ் /கல்வி /

தீபாவளிக்கு அடுத்த நாள் லீவா? செம குஷியில் மாணவர்கள்

தீபாவளிக்கு அடுத்த நாள் லீவா? செம குஷியில் மாணவர்கள்

காட்சிப் படம்

காட்சிப் படம்

Deepavali School Local holidays: கடந்தாண்டு, வியாழக்கிழமை (04.11.2022) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. சொந்த ஊருக்குச் செல்லும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில்,  வெள்ளிக்கிழமையை விடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்தது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  Deepavali School Holidays: கடந்த ஆண்டைப் போலவே, இந்த முறையும்  தீபாவளிக்கு அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளி/கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கிட வேண்டும் என்று பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்து வருகிறது.

  வரும் அக்டோபர் 24 திங்களன்று, தீபாவளி வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு பள்ளி/கல்லூரி மாணாக்கர்கள், பணியாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று கொண்டாடுவது வழக்கம். சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக வருவதால், இந்தாண்டு சொந்த ஊருக்குச் செல்லும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

  எனினும்,  தீபாவளிக்கு அடுத்த நாள் வேலை நாளாக  இருப்பதால், தீபாவளி அன்றிரவே வசிக்கும் ஊர்களுக்கு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சொந்த ஊருக்குச் சென்ற மக்கள் மனத்திருப்தியுடன் பண்டிகையைக்   கொண்டாடும் வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி/கல்லுரிகளுக்கு 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும்  மாணவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  கடந்தாண்டு, வியாழக்கிழமை (04.11.2022) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. சொந்த ஊருக்குச் செல்லும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில்,  வெள்ளிக்கிழமையை விடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள்  தொடர் விடுமுறையாக இருந்தது.

  இதையும் வாசிக்கதீபாவளிக்கு போனஸ் கட்டாயமா? ரூல் என்ன சொல்லுது? போனஸில் பல விஷயம் இருக்கு.. தெரிஞ்சுக்கோங்க!

  எனவே, இந்த ஆண்டும் தீபவாளிக்கு அடுத்த நாள் விடுமுறை அறிவிக்கலாம் என்றும், அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வேறொரு  வார விடுமுறை நாளை பணி நாளாக அறிவிக்கலாம் என்றும் பெற்றோர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Deepavali, School Holiday