யுஜிசி –நெட் (UGC-NET) தேர்வுகளுக்கான பாட வாரியான தேர்வு அட்டவணை வெளியானது. 2021 டிசம்பர் மற்றும் 2022 ஜூன் (December 2021 and June 2022 merged cycles) ஆகிய இரண்டு வருட தேர்வுகளை தேசிய தேர்வு முகமை இம்முறை ஒருங்கே நடத்துகிறது.
தேர்வு அட்டவணை:
அரசியல் அறிவு, மராத்தி, தெலுங்கு, சீனம் உள்ளிட்ட 25 பாடநெறிகளுக்கு ஜுலை 7ம் தேதியும், பாதுகாப்புத் துறை, இந்து, உடற்பயிற்சி உள்ளிட்ட 4 பாட நெறிகளுக்கு ஜுலை 11ம் தேதியும், வீட்டு அறிவியல், மனித உரிமைகள், உளவியல், நேபாளி உள்ளிட்ட பாட நெறிகளுக்கு ஜுலை 12ம் தேதியும் தேர்வுகள் நடைபெறுகின்றன.
இதர பாடங்களுக்கு ஆகஸ்ட் மாதம் 12,13,14 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் வாசிக்க: சீருடைப் பணியாளர் நியமனம்: துணை ராணுவத்தினர் சிறப்பு இடஒதுக்கீடு கோர முடியாது- தமிழக அரசு
மேலும், தேர்வு மையங்களுக்கான அறிவிப்புச் சீட்டும் வெளியாகியுள்ளன. https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எந்தெந்த நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பான விவரங்கள் மட்டும் இதில் இடம் பெற்றிருக்கும்.
நுழைவுச் தேர்வுக்கான அனுமதிச் சீட்டுகள் இல்லை என்றும் அனுமதிச் சீட்டு பின்னர் வெளியிடப்படும் என்றும் தேர்வு முகமை தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்க: பகுதி நேர பிஇ.,பி.டெக் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தேர்வின் தன்மை: இரண்டு தாள்கள் கொண்ட தேர்வாகும். முதல் தாளில் பொது அறிவு குறித்த 50 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். புறநிலை வகையில் பல்வேறு விடைகளிலிருந்து தெரிவுசெய்யும் வினாக்களாக அமையும். முதல் தாளின் தேர்வு காலம் ஒரு மணியாகும்.
இரண்டாம் தாளில் பாடம் சார்ந்த 100 கேள்விகளை கொண்டதாக அமையும். இந்த கேள்விகள் விண்ணப்பதாரர் தெரிவு செய்த பாடங்களிலிருந்து இடம்பெறும். இந்த கேள்வித்தாள் இரண்டு மணிநேர கால அவகாசம் கொண்டது.
நெட் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக நியமனம் பெறுவதற்குத் தகுதி பெறுகின்றனர். முதுநிலை படித்த மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 83 பாடப்பிரிவுகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. விண்ணப்பதாரர், தங்களது முதுநிலை கல்வியோடு தொடர்புடைய பாடப் பிரிவை நெட் தேர்வுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று யூஜிசி அறிவுறுத்தியுள்ளது. உதாரணமாக, அரசியலறிவு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற மாணவர்கள், நெட் தேர்வில் பொது நிர்வாகம் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று யுஜிசி முன்னதாக தெளிவுபடுத்தியிருந்தது.
தேசிய தேர்வு முகமையின் www.nta.ac.in, https://ugcnet.nta.nic.in/ ல் வெளியாகும் தகவல்களை மட்டும் அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.