• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • பொறியியல் சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண் உயர வாய்ப்பு..

பொறியியல் சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண் உயர வாய்ப்பு..

கடந்த ஆண்டைப் போலவே குறிப்பிட்ட சில பொறியியல் பிரிவுகளில் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டினால், கட்-ஆஃப் மதிப்பெண் உயரும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

  • Share this:
    கொரோனா அச்சம் காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படாமல் புதிய கணக்கீட்டு முறையில் மதிப்பெண் வழங்கப்படும் என தமிழ் நாடு அரசு அறிவித்த நிலையில், பொறியியல் சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண் உயர வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    பொறியியல் மாணவர் சேர்க்கையில், கட்-ஆஃப் மதிப்பெண் முக்கிய பங்காற்றுகிறது. கொரோனோ தொற்றால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 10ம் வகுப்பு மதிப்பெண்கள் 50 சதவீதமும், 11ம் வகுப்பு மதிப்பெண் 20 சதவீதமும், 12ம் வகுப்பு செய்முறை மற்றும் அக மதிப்பீட்டு மதிப்பெண் 30 சதவீதமும் சேர்க்கப்பட்டு, மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், 2019ம் ஆண்டு 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காரணத்தால், பொறியியல் கட்-ஆஃப் மதிப்பெண், கடந்த ஆண்டை விட குறிப்பிடத்தக்க அளவு உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    2019ல் நடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 451 மதிப்பெண்களுக்கு அதிகமான பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 239. இதில் 9 ஆயிரத்து 402 பேர் 481 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

    இதனிடையே, கடந்த ஆண்டைப் போலவே குறிப்பிட்ட சில பொறியியல் பிரிவுகளில் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டினால், கட்-ஆஃப் மதிப்பெண் உயரும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண் எவ்வளவு உயரும் எனவும் உத்தேசமாக கணிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கடந்தாண்டு 200-க்கு 149 மதிப்பெண்கள் என்ற அளவில் இருந்த கட்-அஃப் இந்த ஆண்டு 175 ஆக உயரக் கூடும் எனத் தெரிகிறது. இதேபோல் 195 என்ற அளவில் இருந்த கட்-ஆஃப் இந்த ஆண்டு 199 ஆக உயரலாம் எனக் கூறப்படுகிறது.

    இதனிடையே நடப்பு கல்வியாண்டில், 15 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் 190க்கு மேல் கட்-ஆஃப் மதிப்பெண்களை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: