Home /News /education /

இன்றிரவு 10 மணிக்கு CUET பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

இன்றிரவு 10 மணிக்கு CUET பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

நுழைவுத் தேர்வு

நுழைவுத் தேர்வு

இன்று வெளியாகும் CUET UG 2022 நுழைவுத் தேர்வு முடிவுகள் அடிப்படையில், நாட்டின் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களும் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை தனித்தனியே வெளியிடும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    CUET (UG) - 2022:  மத்திய  பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று இன்றிரவு 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    புதிய தேசிய கல்விக் கொள்கை-ன்படி,  2022-23 கல்வியாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் CUET என்ற பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஆறு கட்டங்களில் கடந்த ஜுலை  15ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 259 நகரங்களில்  அமைந்துள்ள 489 தேர்வு மையங்களில்  பொது நுழைவுத் தேர்வு நடைபெற்றது.

    முன்னதாக,கடந்த செப்டம்பர் 8ம் தேதி இத்தேர்வின் உத்தேச விடைக்குறிப்பை (Provisional Answer Keys) தேசிய தேர்வு முகமை  வெளியிட்டது. உத்தேச விடைத் தொகுப்பில் குறை இருந்தால், முகமைக்கு தெரியபடுத்தவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இன்று, வெளியிடப்படும் தேர்வு முடிவுகள் அடிப்படையில், நாட்டின் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களும்,  இளநிலை படிப்பை வழங்க இருக்கும் மாநிலம் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் தனித்தனியே மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடும் என்று கூறப்படுகிறது.

    இதையும் வாசிக்க: அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்: மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்

    மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம்  செய்வது எப்படி? 

    விண்ணப்பதாரர்கள் cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுக வேண்டும்.

    முகப்புப் பக்கத்தில், CUET UG 2022 result என்ற  இணைப்பைக் கிளிக் செய்யவும்

    விண்ணப்ப பதிவெண், பிறந்த தேதி ஆகிவற்றை சமர்ப்பிக்க வேண்டும். CUET UG 2022 மதிப்பெண் பட்டியல்  திரையில் தோன்றும் . எதிர்கால தேவைக்குப் பயன்படும் என்பதால், மதிப்பெண் பட்டியலில் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    நாடு முழுவதும் 44 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள், 11 தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள், 19 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 90 பல்கலைக் கழகங்களில் 54,555 இளநிலைப் பாட பிரிவுகளில் இந்த மதிப்பெண் பட்டியல் சேரக்கை நடத்தப்படுகிறது
    Published by:Salanraj R
    First published:

    Tags: College Admission, Entrance Exam

    அடுத்த செய்தி