Home /News /education /

சியுஇடி தேர்வு: விண்ணப்பங்களின் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு

சியுஇடி தேர்வு: விண்ணப்பங்களின் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

https://cuet.samarth.ac.in/ என்ற இணையதள முகவரியில் வரும் மே 31ம் தேதி வரை இந்த வசதி செயல்பாட்டில் இருக்கும்.

    சியுஇடி நுழைவுத் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் இன்று முதல் தங்கள் ஆன்லைன் விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, நாடு முழுவதிலும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு (சியுஇடி - யுஜி ) தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது. இதற்கான விண்ணப்பபங்கள் கடந்த 22ம் தேதி வரை பெறப்பட்டது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தாண்டு பொது நுழைவுத் தேர்வை எழுத இருக்கின்றனர்.



    இந்நிலையில், பெற்றோர் மற்றும் மாணவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை ஏற்று, மாணவர்கள் தேர்வு செய்துள்ள தேர்வு மையங்களை மாற்றிக்கொள்வது உட்பட தங்களது விண்ணப்பங்களில், திருத்தங்களை மேற்கொள்வதற்கு கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை அளித்துள்ளது.



    இதன்படி, பிறந்ததேதி, பாலினம், வகுப்பு, தேர்வு மையங்கள், தேர்வு மொழி, 10, 12ம் வகுப்பு விபரம் உள்ளிட்ட தகவல்களை தேர்வர்கள் மாற்றிக் கொள்ளலாம். இருப்பினும், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, நிரந்தர முகவரி உள்ளிட்ட விபரங்கள் இறுதியானதாகக் கருதப்படும். இதில், மாற்றங்கள் பெறப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாணவர்களும் தற்போது இந்த வசதியைப் பயன்படுத்தி தேர்வு மையங்களை மாற்றுத் தேர்வு செய்வது உட்பட வேறு திருத்தங்களை ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் செய்துகொள்ளலாம்.  https://cuet.samarth.ac.in/ என்ற  இணையதள முகவரியில் வரும் மே  31ம் தேதி வரை இந்த வசதி செயல்பாட்டில் இருக்கும். விண்ணப்பதாரர்கள், இணையதளத்திற்குச் சென்று, தங்களுடைய விவரங்களை உறுதி செய்து, தேவைப்படுகின்ற திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

    தேவையான கூடுதல் கட்டணங்கள் ஏதேனும் செலுத்த வேண்டியிருந்தால், அதனை வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம், யுபிஐ, பேடிஎம் ஆகியவை மூலமாகச் செலுத்தலாம்.

    விண்ணப்பப் படிவங்களில் செய்த திருத்தங்களின் காரணமாக (கூடுதல்) கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால், கட்டணம் செலுத்தப்பட்ட பிறகே, திருத்தியமைக்கப்பட்ட விவரங்கள் விண்ணப்பப் படிவத்தில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    CUET (UG) 2022: தமிழகத்தில் வெறும் 16,590 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்

    திருத்தங்களை மேற்கொள்வதற்கு வேறு வாய்ப்புகள் எதுவும் அளிக்கப்படமாட்டாது என்பதால் விண்ணப்பதாரர்கள் திருத்தங்களை மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in
    Published by:Salanraj R
    First published:

    Tags: Entrance Exam

    அடுத்த செய்தி