ஹோம் /நியூஸ் /கல்வி /

CUET UG Exam Date: கியூட் நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு

CUET UG Exam Date: கியூட் நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

அறிவிப்பின் படி, ஜுலை மாதம் 15, 16, 19, 20 ஆகிய நாட்களிலும் ஆகஸ்ட் மாதம் 4,5,6,7,8,10 ஆகிய  நாட்களிலும் கணினி அடிப்படையில் தேர்வு நடத்தப்படும்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இளநிலை பட்டப்படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET- UG) தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க முடியாமல் போன மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக விண்ணப்ப செயல்முறையை மீண்டும் தொடங்கியுள்ளது.

  கால அவகாசம் நீட்டிப்பு: 

  மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர்வதற்கான ஒரே வாய்ப்பாக இந்த நுழைவுத் தேர்வு இருப்பதால், விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான மேலும் ஒரு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்கள் புதிதாக விண்ணப்பம் செய்வதற்கும், விண்ணப்பப் படிவங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கும் வரும் 24ம் தேதி வரை வாய்ப்பளிக்கப்படும்.  இதற்கான, இணையதள முகவரி https://cuet.samarth.ac.in ஆகும்.

  புதிதாக விண்ணப்பிக்க மற்றும் படிவங்களை திருத்த23 ஜூன் காலை  9  மணியில் இருந்து
  விண்ணப்பப்படிவங்கள் 24 ஜூன் இரவு  11.50 மணி வரை இருக்கும்

  மாணவர்கள் தாங்கள் விரும்பும் ஒன்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒரே விண்ணப்பம் மூலம் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

  தேர்வு தேதி:       

  அறிவிப்பின் படி, ஜுலை மாதம் 15, 16, 19, 20 ஆகிய நாட்களிலும் ஆகஸ்ட் மாதம் 4,5,6,7,8,10 ஆகிய  நாட்களிலும் கணினி அடிப்படையில் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 554 நகரங்களில் அமைந்துள்ள  மையங்களிலும், அயல்நாட்டில் 15 நகரங்களிலும் தேர்வு நடத்தப்படுகிறது.

  தற்போது வரை, 9,50,804 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

  இதையும் வாசிக்கஅடுத்த 6 மாதத்துக்குள் 42,000 பேருக்கு பணி - வேலைவாய்ப்பு குறித்து எஸ்எஸ்சி முக்கிய அறிவிப்பு 

  43 மத்திய பல்கலைக்கழகங்கள் 13 மாநில பல்கலைக்கழகங்கள், 12 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் என மொத்தம்  86 உயர்கல்வி நிறுவனங்கள் இந்த பொது நுழைவத் தேர்வின் கீழ் மாணவர் சேர்க்கையை நடத்தவுள்ளன.

  இதையும் வாசிக்க:   திருமணம் ஆகாத ஆண்கள் அக்னிபத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்- இந்திய விமானப் படை

  தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. 12ம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே இளநிலைப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி இணை அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தார்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Education, Entrance Exam