பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, முதுகலை படிப்புகளுக்கான பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஜூன் 18 முதல், ஜுலை 4 வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட 24 உயர்க்கல்வி நிறுவனங்களில் உள்ள முதுநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த மே-19 முதல் தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 18-06-2022 (நேற்று) என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
https://cuet.samarth.ac.in/என்ற இணையதள முகவரியில் வரும் ஜுலை 4ம் தேதி வரை இந்த வசதி செயல்பாட்டில் இருக்கும். விண்ணப்பதாரர்கள், இணையதளத்திற்குச் சென்று, தங்களுடைய விவரங்களை உறுதி செய்து, தேவைப்படுகின்ற திருத்தங்களை மேற்கொள்ளலாம். புதிதாகவும் விண்ணப்பிக்கலாம்.
தேவையான கூடுதல் கட்டணங்கள் ஏதேனும் செலுத்த வேண்டியிருந்தால், அதனை வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம், யுபிஐ, பேடிஎம் ஆகியவை மூலமாகச் செலுத்தலாம்.
பொது நுழைவுத் தேர்வு வரும் ஜுலை மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: இந்திய பொருளாதாரம் உயர்கல்வியை ஏற்றுக் கொள்கிறதா?
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 800 ஆகும். எஸ்சி/எஸ்டி/ பால் புதுமையினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். பொருளாதார சமூகவாய்ப்பு பெற்ற ஓபிசி, பொருளாதார பின்தங்கிய வகுப்பினர் ரூ.600 செலுத்த வேண்டும்.
மத்திய அரசுப் பட்டியலில் உள்ளவாறு இடஒதிக்கீடு முறை பின்பற்றப்படும்.
அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். https://cuet.nta.nic.in/ மற்றும் www.nta.ac.in.
இதையும் வாசிக்க: நாளை 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - எப்படி பார்ப்பது?
வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். cucet@nta.ac.in. என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.