Home /News /education /

CUET PG : முதுநிலை படிப்புகளுக்கு ஜுலை கடைசியில் பொது நுழைவுத் தேர்வு - யுஜிசி

CUET PG : முதுநிலை படிப்புகளுக்கு ஜுலை கடைசியில் பொது நுழைவுத் தேர்வு - யுஜிசி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாட்டில் மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET PG) வரும் ஜுலை மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும்.

42 மத்திய பல்கலைக் கழகங்களில் முதுநிலை படிப்புகளுக்கு  பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல், அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும், இளங்கலை மற்றும் பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே நடைபெறும் என்று பல்கலைக் கழக மானியக் குழு  அறிவித்தது. இதனையடுத்து, இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப செய்முறை மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், நாட்டில் முதுகலை படிப்புகளுக்கான பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு வரும் ஜுலை மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் என்று பல்கலைக் கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள், nta.ac.in என்ற இணையத்தளத்தில் இன்று (மே-19 ) முதல் பெறப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை:

CUET (UG) 2022 -ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cuet.nta.nic.in/ செல்லவும்.

கல்வி சான்றிதழ், வயது, சாதி சான்றிதழ், இருப்பிடம், சான்று ஆவணங்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைபடம் ( 10 kb to 200 kb), கையொப்பம், மின்னஞ்சல் முகவரி போன்ற இதர பொது விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

முக்கியமான  நாட்கள்: இதற்கான விண்ணப்பங்களை, தேசிய தேர்வு முகமையின் cuet.nta.nic.in. என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 18-06-2022 ஆகும். செலுத்தப்படும் கட்டணம் அன்றிரவு 11.50 மணி வரை பெறப்படும்.

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பது எப்போது? பள்ளிக்கல்வி துறை பிளான் இது தான்

அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். https://cuet.nta.nic.in/ மற்றும் www.nta.ac.in

வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். cucet@nta.ac.in. என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.
Published by:Salanraj R
First published:

Tags: Education

அடுத்த செய்தி