முகப்பு /செய்தி /கல்வி / CUET (UG) 2022: தமிழகத்தில் வெறும் 16,590 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்

CUET (UG) 2022: தமிழகத்தில் வெறும் 16,590 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தென் மாநிலங்களைப் பொறுத்த வரையில், அதிகபட்சமாக கேரளாவில் 40,476 பேரும், தமிழகத்தில் 16,590 பேரும் விண்ணப்பித்துள்ளனர். 

  • Last Updated :

இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களில், பெரும்பாலானோர் தேசிய தலைநகரில் உள்ள டெல்லி பல்கலைக்கழகத்துக்கு அதிக முன்னுரிமை கொடுத்தது தெரியவந்துள்ளது.

முன்னதாக, நாடு முழுவதிலும் உள்ள 42 மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது. இதற்கான விண்ணப்பபங்கள் நேற்றைய தேதி வரை பெறப்பட்டது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தாண்டு பொது நுழைவுத் தேர்வை எழுத இருக்கின்றனர்.

பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் டெல்லி பல்கலைகழகத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.  கடந்தாண்டு, இதே பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்தாண்டு எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

பல்கலைக்கழகம்விண்ணப்பதாரர்கள்
டெல்லி பல்கலைக்கழகம்6 லட்சம் பேர்
பனராஸ் இந்து பல்கலைக்கழகம்3.94 லட்சம் பேர்
அலகாபாத் பல்கலைக்கழகம்2.31 லட்சம் பேர்
பாபாசாகிப் பீமாரா அம்பேத்கர் பல்கலைக்கழகம்1.49 லட்சம் பேர்
ஜாமியா மில்லியா இஸ்லாமியா1.21 லட்சம் பேர்
  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்57,000 பேர்

இரண்டாவதாக பனராஸ் இந்து பல்கலைக்கழகத்துக்கு 3.94 லட்சம் பேர்  விண்ணப்பித்துள்ளனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர 57,000  பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தென் மாநிலங்கள் பின்னடைவு:  இந்த நுழைவுத் தேர்வுக்கு வட மாநிலங்களைச் சேர்த்த மாணவர்களே பெருமளவு விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, டெல்லியில் 1.5 லட்சம் பேரும், பீகாரில் 83,672 பேரும், ஹரியானாவில் 69,349 பேரும், மத்திய பிரதேசத்தில் 62,394 பேரும், ராஜஸ்தானில் 48,016 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

தென் மாநிலங்களைப் பொறுத்த வரையில், அதிகபட்சமாக கேரளாவில் 40,476 பேரும், தமிழகத்தில் 16,590 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மாநிலப் பாடத்திட்டங்களில் படித்து அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், இந்த இந்த நுழைவுத் தேர்வின் (Objective Types quetions) அடிப்படையிலேய மத்தியப் பல்கலைக்கழகங்களில் இனி மாணவர் சேர்கை நடைபெறும் என்பதால் தமிழக அரசு இத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருந்ததது.

இதற்கிடையே, 12 மாநிலப் பல்கலைக்கழகங்களும், 19 தனியார் மற்றும் 11 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் நுழைவுத் தேர்வில் (CUET) மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில்  மாணவர்கள் சேர்க்கையை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளன.

First published:

Tags: Entrance Exam