மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி..!

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, சி.டி.இ.டி என்ற தகுதித் தேர்வு சி.பி.எஸ்.இ.சார்பில் நடத்தப்படுகிறது.

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி..!
கேட் நுழைவுத் தேர்வு
  • News18
  • Last Updated: February 6, 2019, 10:56 AM IST
  • Share this:
மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான சி.டி.இ.டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, சி.டி.இ.டி என்ற தகுதித் தேர்வு சி.பி.எஸ்.இ.சார்பில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் ஜூலை 7-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மார்ச் 5 கடைசி நாளாகும். இந்தத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. 5-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு முதல் தாள் மட்டும் எழுதினால் போதுமானது. எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு இரண்டு தாள்களும் எழுத வேண்டும்.


இதில் ஒரு தேர்வை மட்டும் எழுத விரும்பும் பொதுப் பிரிவினர் ரூ. 700 கட்டணமும், இரண்டு தாள்களும் எழுத விரும்புபவர்கள் ரூ. 1200 கட்டணமும் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஒரு தாளுக்கு ரூ. 350 கட்டணமும், இரண்டு தாள்களுக்கு ரூ. 600 கட்டணமும் செலுத்தவேண்டும்.

மேல் அதிக விவரங்களுக்கு www.ctet.nic.in என்ற இணையதளத்தில் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Also See..
First published: February 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்