ஹோம் /நியூஸ் /கல்வி /

பள்ளிகளில் வேதியியல் கல்வியை மேம்படுத்த சிஎஸ்ஐஆர் திட்டம்!

பள்ளிகளில் வேதியியல் கல்வியை மேம்படுத்த சிஎஸ்ஐஆர் திட்டம்!

ஜிக்யாசா திட்டம், நாட்டில் தற்போதுள்ள கல்வித் திட்டங்களை மேம்படுத்தும். உதாரணமாக, தற்போதைய ஆசிரியர் பயிற்சி திட்டம் மற்றும் வேதியியல் முகாம்களை விரிவுப்படுத்த உதவும்- இந்திய அறிவியல் துறை

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் வேதியியல் கல்வியை மேம்படுத்தும் திட்டத்துக்கு இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

  இதுதொடர்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  பள்ளி குழந்தைகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை இலக்காக கொண்டு சிஎஸ்ஐஆர் செயல்படுத்திக் கொண்டு  ஜிக்யாசா திட்டத்தில் (CSIR Jigyasa) இணைந்து பணியாற்ற உறுதியளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இரண்டு அமைப்புகளும் கையெழுத்திட்டுள்ளன.

  நிதி அல்லாத ஒன்றான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், புதுப்பிப்பதற்கான வாய்ப்புடன், குறைந்தது மூன்று ஆண்டுகள் செல்லுபடியாக கூடியதாக இருக்கும்.

  கடலியல் மற்றும் சுரங்கம் முதல் ரசாயனங்கள் துறை, நானோ தொழில்நுட்பம் வரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் ஆராய்ச்சி மையங்களை கொண்டுள்ளது.

  இதையும் வாசிக்க: 'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் மிகப்பெரிய வெற்றி: வெளிநாட்டு ஆய்வாளர்கள் பாராட்டு!

  ஜிக்யாசா திட்டம், நாட்டில் தற்போதுள்ள கல்வித் திட்டங்களை மேம்படுத்தும். உதாரணமாக, தற்போதைய ஆசிரியர் பயிற்சி திட்டம் மற்றும் வேதியியல் முகாம்களை விரிவுப்படுத்த உதவும். மேலும், பல்வேறு இணையவழி கல்வி திட்டங்களை தொடங்கும்.

  ஜிக்யாசா திட்ட தொடக்க நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் அனைத்து ஆய்வகங்களையும் உள்ளடக்கிய உலகளாவிய பரிசோதனையை (Global Experiment) ஏற்பாடு செய்துள்ளது. இதில், 2,000 பள்ளி மாணவர்கள், 150 ஆசிரியர்கள் மற்றும் 350 தன்னார்வலர்கள் 30-க்கும் மேற்பட்ட ஆய்வகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சோதனைகளில் கலந்து கொண்டனர்.

  இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Education, School education