கிரெடிட் தேர்வு முறையை ரத்து செய்ய முடியாது - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்

விடைத்தாள் திருத்தம் செய்யும் முறை கடுமையாக்கப்பட்டிருப்பதால் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளது என்கின்றனர் மாணவர்கள்.

கிரெடிட் தேர்வு முறையை ரத்து செய்ய முடியாது - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்
அண்ணா பல்கலைக்கழகம்
  • News18
  • Last Updated: January 21, 2019, 7:44 PM IST
  • Share this:
அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுமுறையில் செய்யப்பட்ட மாற்றங்களை ரத்து செய்ய முடியாது என்று அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னர் இருந்த அரியர் முறைப்படி , தோல்வியடைந்த குறிப்பிட்ட பாடத்தினை அடுத்த செமஸ்டரில் எழுதலாம் என இருந்தது. 2017-ம் ஆண்டில் இருந்து அம்முறை மாற்றப்பட்டு , கிரெடிட் முறை அமல்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.

இதனால் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி வீதம் குறைகிறது எனவும், விடைத்தாள் திருத்தம் செய்யும் முறை கடுமையாக்கப்பட்டிருப்பதால் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளது என்றும் மாணவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் ஓராண்டு காலம் வீணாகிறது எனவும் வருத்தத்துடன் தெரிவித்திருந்தனர்.


இதனை எதிர்த்து அண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன் திரண்ட மாணவ, மாணவிகள் கிரெடிட் முறையைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து மாணவர்களிடம் பல்கலைக்கழகப் பதிவாளர் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாணவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக கோரிக்கை  மனுவைப் பெற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்வு விதிகளில் செய்யப்பட்ட மாற்றம் தொடர்பாக விளக்கம் அளித்தார். இருப்பினும், தேர்வுமுறையை மாற்றி அமைப்பது குறித்து அவர் உறுதி அளிக்கவில்லை.

இந்நிலையில்  இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, ‘ஏழாவது செமஸ்டரில் தோல்வியடைந்தவர்கள், எட்டாவது செமஸ்டரில் தேர்வு எழுத முடியும். நிறைய மாணவர்கள் பொறியியல் என்றால், என்னவென்றே தெரியாமல் படித்து முடிக்கின்றனர். பெற்றோர்களின் கட்டாயத்தால் நிறைய பேர் படிக்கின்றனர். ஆறு பாடத்தில் தோல்வியடைபவர்களை எப்படி நல்ல பொறியாளராக கணக்கில் கொள்ள முடியும். எனவே, தேர்வு சீர்திருத்தங்களை குறிப்பாக கிரெடிட் முறையை ரத்து செய்ய முடியாது’ என்று தெரிவித்தார். இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.Also see:

First published: January 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்