முகப்பு /செய்தி /கல்வி / பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நிறைவு... 9 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நிறைவு... 9 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

மாணவர்கள்

மாணவர்கள்

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில் 9 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 446 பொறியியல் கல்லூரிகளில் 1, 54, 278 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.

கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், 53, 628 இடங்கள் காலியாக உள்ளன. 13 கல்லூரிகளில் மட்டுமே 100 விழுக்காடு இடங்கள் நிரம்பியுள்ள நிலையில் 9 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. போதிய மாணவர்கள் சேராத 30 பொறியியல் கல்லூரிகளை அடுத்த ஆண்டில் மூடுவதற்கு அண்ணா பல்கலைக் கழகம் திட்டமிட்டுள்ளது.

கொரோனா காலத்திற்கு பிறகு பொதுமக்களிடம் வருவாய் குறைந்துள்ளது. வேலை இழப்பு அதிகரித்துள்ளது. மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேருவது குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணம்தான்.

Also see... அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்

அதேநேரம். 25 சதவிகிதத்திற்கும் கீழ் மாணவர்கள் சேர்ந்துள்ள கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமித்து தரமான கல்வியை அளிக்க முடியுமா? என்பதும் கேள்வி குறியாகியுள்ளது.

First published:

Tags: Engineering counselling, Students