தேர்வுத் துறையில் எழுந்துள்ள கொரோனா அச்சம் - பணிகள் முடக்கம்

கொரோனா பயத்தால் அரசுத்தேர்வுகள் துறை ஊழியர்கள் பணிக்கு வராததால் தேர்வுத் துறை பணிகள் முடங்கியுள்ளன.

தேர்வுத் துறையில் எழுந்துள்ள கொரோனா அச்சம் - பணிகள் முடக்கம்
அரசு தேர்வுத் துறை
  • Share this:
அரசு தேர்வுகள் துறை இயக்குனர் இணை இயக்குனர் உள்ளிட்ட தேர்வுத்துறை ஊழியர்களுக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் எழுந்துள்ள அச்சம் காரணமாக 250 பேர் பணியாற்றும் தேர்வுத்துறையில் 30 முதல் 40 ஊழியர்கள் மட்டுமே தினசரி பணிக்கு வருகின்றனர் .

அவ்வாறு வரும் ஊழியர்களும் பிற்பகல் 12 மணி அளவில் அலுவலகத்திற்கு வருகை புரிவதுடன் மாலை 4 மணிக்கெல்லாம் புறப்பட்டு சென்று விடுகின்றனர். இதனால் தேர்வுத் துறை பணிகள் முழுவீச்சில் நடைபெறாமல் முடங்கியுள்ளது.

இந்த நிலையில் தேர்வுத்துறை இயக்குனர் பொறுப்பு தற்போதைய தொடக்கக் கல்வி இயக்குனராக உள்ள பழனிச்சாமியிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பொறுப்பையும் கூடுதலாக வசித்து வருகின்றார்.



இந்த துறைதான் பள்ளிகள் திறப்பு காலதாமதம் ஆகும் என்பதால். அதற்கேற்ப பாடத்திட்டங்களை குறைக்கும் மிக முக்கிய பணியை கையாள்கிறது. இந்த சூழ்நிலையில்தான்  ஏற்கனவே முக்கிய இரண்டு துறைகளுக்கு பொறுப்பு வகிக்கும் அவர் முடங்கியுள்ள தேர்வுத்துறை பணிகளை எவ்வாறு சமாளிப்பார், பாடத்திட்ட குறைப்பு என்கிற மிக முக்கிய பணியை மேற்கொள்வார் என்பதே கல்வித் துறை வட்டாரங்களில் தற்போது எழுந்துள்ள கேள்வி2யாக உள்ளது.

மேலும் படிக்க...பத்தாவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீடு வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

 
First published: June 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading