தரமான கல்வியை அனைவருக்கும் கிடைக்க செய்ய ஏதுவாக
சென்னை ஐஐடி
http://nsm.iitm.ac.in/cse/ எனும் போர்ட்டலை தொடங்கியுள்ளது.
மிகவும் மையப்படுத்தப்பட்ட, அனைவருக்கும் சென்றடையாத இந்திய தொழில்நுட்பக் கழக உயர்கல்வி முறையை ஜனநாயகப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை சென்னை ஐஐடி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, உலகின் முதல் இணையவழி (B.Sc) நிரலாக்கல், தரவு அறிவியலுக்கான இளநிலைப் பட்டப்படிப்பை சென்னை ஐ.ஐ.டி தொடங்கியது. வயது, கேட் மதிப்பெண், எண்ணிக்கை போன்ற முக்கியத் தடைகளை நீக்கி 12 வகுப்பு முடிக்கும் தற்போதைய தேர்ச்சியடைந்த மாணவர்களும், பட்டதாரிகளும், பணிபுரியும் தொழில் வல்லுநர்களும் இந்தப் பட்டப்படிப்பில் இணையலாம் என்று தெரிவித்தது. இந்த திட்டம் பலராலும் பாரட்டப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தனது கணினி அறிவியல் பாடப் பிரிவுகளை உலகில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நெருக்கமாக எடுத்து செல்லும் முயற்சியை சென்னை ஐ.ஐ.டி மேற்கொண்டுள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் தனது மாணவர்களுக்கு எடுத்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளை http://nsm.iitm.ac.in/cse/ என்ற போர்ட்டலின் கீழ் ஒருங்கிணைத்துள்ளது.
இந்த போர்ட்டலின் மூலம் புரோகிராமிங் (Programming), டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ் (Data Structures), கம்ப்யூட்டர் ஆர்கனைசேஷன் (Computer Organisation), அல்காரிதம் (Algorithms) ஆகிய முக்கிய கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளை மாணவர்களுக்கு அளிக்கிறது. பாடப்பிரிவோடு தொடர்புடைய ஆன்லைன் வினாடி வினா, ஹேக்கத்தான் தொடர்புடைய இணைப்பு, புத்தகப் பட்டியல் போன்ற பல்வேறு வசதிகள் இதில் உள்ளன.
மேலும், மாணவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்த ஏதுவாக, நேரடி பயிற்சி அமர்வுகளை நடத்த மூத்த மாணவர்களை ஈடுபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாக சென்னை ஐஐடியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் ரூபேஷ் நஸ்ரே தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் குறிப்பாக ஐ.ஐ.டி.க்களில் மிகவும் விரும்பப்படும் பொறியியல் துறைகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முக்கியமான ஒன்றாகும். மாணவர்களும் அதிகளவில் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஐ.ஐ.டியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் சேர எண்ணற்ற மாணவர்கள் விண்ணப்பித்தாலும், இத்துறையில் குறைந்த அளவிலேயே மாணவர்களுக்கு இடம் கிடைக்கிறது.
IIT Madras Online Course
என்.எல்.சியில் 300 பேர் பணி நியமனப் பட்டியலில் ஒரே ஒருவர் தான் தமிழர் - சு.வெங்கடேசன் காட்டம்
சென்னை ஐஐடி-யில் படிக்க முடியாத மாணவர்கள்- குறிப்பாக தொலைதூர மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த போர்ட்டல் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வி நிறுவனத்தில் கற்பிக்கப்படும் அதே பாடத் தொகுதிகள் அவர்களுக்கும் கிடைக்கும். அனைத்து மாணவர்களுக்கும் தரமான பாடத் தொகுப்புகள் கிடைக்கும் என்பதை இந்த முன்முயற்சி உறுதிசெய்யும் என்றும் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.