ஹோம் /நியூஸ் /கல்வி /

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

Medical Study

Medical Study

19 வகையான மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியலை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரையில் நேற்று வெளியிட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழகத்தில் 19 வகையான மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர்வதற்காக 64 ஆயிரத்து 900 பேர் விண்ணப்பித்தனர். அரசு மருத்துவக்கல்லூரிகளில் 2 ஆயிரத்து 676 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 13 ஆயிரத்து 832 இடங்களும் உள்ளன.

19 வகையான மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியலை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரையில் நேற்று வெளியிட்டார். பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் முதல்கட்ட இணைய கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

இதில், முதல் கட்டமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் இன்று பங்கேற்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

Must Read : தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மதுரையில் மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: MBBS, Medical counseling