நவீன பாடப்பிரிவுகளை கல்லூரிப் படிக்கும் போதே வழங்கிடும் விதமாக, நான் முதல்வன் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சென்னை கலைவானர் அரங்கில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், 'நான் முதல்வன்' என்ற இணையதளத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
சிறப்பம்சங்கள்:
இந்த இணையதளம் உயர்கல்வி குறித்த தெளிவான, சீரான தகவல்களை வழங்கும். மருத்துவம், பொறியியல் படிப்புகளைத் தாண்டி பல்வேறு துறைசார் படிப்புகளை பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும்.
இந்த இணையதளத்தில் திறனறிவு தேர்வு (Psycho Metric Test) வசதிஉள்ளது. இந்த தேர்வு, மாணவர்களின் உளவியல் பண்புகளை ஆராய்ந்து, அவர்களின் தனித்திறனை அறிந்து, அதற்கு ஏற்றவாறு பயிற்சிகளை பரிந்துரைக்கும்.
இந்த இணையதளத்தின் வாயிலாக, நவீனத் தொழில் நிறுவனங்களில் சேர தேவைப்படும் பாடப்பிரிவுகள் குறித்த விவரங்களை மாணவர்கள் பெறுவர்.
இந்த இணையதளம் மூலம் Robotics, Virtual Reality, oracle, Machine learning, Cloud Computing, Artificial Intelligence, Cyber Security, Internet of Things போன்ற நவீன கூடுதல் பிரிவுகளை இலவசமாகவும், மிகக் குறைவான கட்டணத்தில் பயிலும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தமாவது குறித்த பயிற்சிகள் இந்த இணைய தளத்தில் வழங்கப்படும்.
இதையும் வாசிக்க: நீட் முதுகலை கலந்தாய்வை தள்ளிவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
கல்லூரி பயிலும் காலத்திலேயே IIT, NPTEL, CISCO, Coursera, Autodesk, Mathworks போன்ற உலகத் தரம் வாய்ந்த சான்றிதழ்களை பெறும் வாய்ப்பை இந்த இணையதளம் உருவக்கித் தரும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Education