Home /News /education /

CUET (UG) 2022: பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளையுடன் நிறைவு.... உடனடியாக விண்ணப்பியுங்கள்

CUET (UG) 2022: பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளையுடன் நிறைவு.... உடனடியாக விண்ணப்பியுங்கள்

மாதிரி படம்

மாதிரி படம்

நாளை வரை மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படும். கட்டணம் அன்றிரவு 11.50 மணி வரை பெறப்படும்.

மத்திய பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. எனவே, மாணவர்கள் உடனடியாக இத்தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முன்னதாக, நாட்டில் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று பல்கலைகழக மானியக் குழு அறிவித்தது.

இந்த நுழைவத் தேர்வினை, வரும் கல்வியாண்டில் இருந்து இந்த பொது நுழைவுத் தேர்வு, தமிழ், மலையாளம், கன்னடம் உட்பட 13 மொழிகளில் தேசிய தேர்வு முகமை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இந்த நுழைவுத் தேர்வுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த தரவுகளை மத்தியக் கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டது. பெரும்பாலான விண்ணப்பங்கள் டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தென் மாநிலங்களில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முக்கியமான நாட்கள்: 

இதற்கான விண்ணப்பங்களை, தேசிய தேர்வு முகமையின் cuet.samarth.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 06-5-2022 ஆகும் (நாளை). செலுத்தப்படும் கட்டணம் அன்றிரவு 11.50 மணி வரை பெறப்படும்.

ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை:

CUET (UG) 2022 -ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cuet.samarth.ac.in செல்லவும்.

கல்வி சான்றிதழ், வயது, சாதி சான்றிதழ், இருப்பிடம், சான்று ஆவணங்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைபடம் ( 10 kb to 200 kb), கையொப்பம், மின்னஞ்சல் முகவரி போன்ற இதர பொது விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

தேர்வு முறை: தமிழ், ஆங்கிலம், இந்தி, கனடா, மலையாளம் உட்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படும். தேர்வு கணினி வழியில் நடத்தப்படும். இந்த, தேர்வு நான்கு பிரிவுகளைக் கொண்டதாய் இருக்கும். முதல் பிரிவில் உள்ள இரண்டு பகுதிகள் தேர்வர்களின் மொழியறிவுத் திறனை சோதிப்பதாக அமையும். இரண்டாவது பகுதி மாணவர்களின் துறை சார்ந்த அறிவை சோதிக்கும். மூன்றாவது பிரிவு, மாணவர்களின் பொது அறிவு மற்றும் தன்னிறைவை பரிசோதிக்கும்.

மாநிலப் பாடத்திட்டங்களில் படித்து அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், இந்த இந்த நுழைவுத் தேர்வின் (Objective Types quetions) அடிப்படையிலேய மத்தியப் பல்கலைக்கழகங்களில் இனி மாணவர் சேர்கை நடைபெறும். பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (CUET) மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், மாநிலப் பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம்.

விண்ணப்பிக் கட்டணம்: 






































Slot: தேர்வு நேரம்



No. of Tests/ Subjects

 இந்தியாவில் உள்ள தேர்வு மையங்கள்
வெளிநாடுகளில் உள்ள தேர்வு மையங்கள்



பொதுப் பிரிவினர்

(Unreserved)



இதர பிற்படுத்த ப்பட்ட வகுப்பின்ர்(கிரீமி லேயரில் இல்லாத வகப்பினர்  */

பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பியான்ர் **)

பட்டியல்  சாதிகள்/ பட்டியல்  பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள் / பால் புதுமையினர்


Slot1: காலை  09.00  முதல்  நண்பகல்  12.15  மணி வரை



Upto 4



₹ 650/-



₹ 600/-



₹ 550/-



₹ 3000/-



Slot2:  மதியம் 03.00 மணி முதல்  மாலை   06.45 வரை .



Upto 5



₹ 650/-



₹ 600/-



₹ 550/-



₹ 3000/-


 

அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். cuet.samarth.ac.in மற்றும் www.nta.ac.in

வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். t: cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.
Published by:Salanraj R
First published:

Tags: Entrance Exam

அடுத்த செய்தி