மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான (CUET) விண்ணப்ப செயல்முறை தொடங்கியது.
இதற்கான விண்ணப்பங்களை, தேசிய தேர்வு முகமையின் cuet.samarth.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 06-5-2022 ஆகும். செலுத்தப்படும் கட்டணம் அன்றிரவு 11.50 மணி வரை பெறப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
Slot: தேர்வு நேரம் | |||||
No. of Tests/ Subjects | |||||
இந்தியாவில் உள்ள தேர்வு மையங்கள் | வெளிநாடுகளில் உள்ள தேர்வு மையங்கள் | ||||
பொதுப் பிரிவினர் (Unreserved) | இதர பிறபடுத்த ப்பட்ட வகுப்பின்ர்(கிரீமி லேயரில் இல்லாத வகப்பினர் */ பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பியான்ர் **) | பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள் / பால் புதுமையினார் | |||
Slot1: காலை 09.00 முதல் நண்பகல் 12.15 மணி வரை | Upto 4 | ₹ 650/- | ₹ 600/- | ₹ 550/- | ₹ 3000/- |
Slot2: மதியம் 03.00 மணி முதல் மாலை 06.45 வரை . | Upto 5 | ₹ 650/- | ₹ 600/- | ₹ 550/- | ₹ 3000/- |
ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை:
CUET (UG) 2022 -ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cuet.samarth.ac.in செல்லவும்.
கல்வி சான்றிதழ், வயது, சாதி சான்றிதழ், இருப்பிடம், சான்று ஆவணங்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைபடம் ( 10 kb to 200 kb), கையொப்பம், மின்னஞ்சல் முகவரி போன்ற இதர பொது விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
தேர்வு முறை: தமிழ், ஆங்கிலம், இந்தி, கனடா, மலையாளம் உட்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படும். தேர்வு கணினி வழியில் நடத்தப்படும். இந்த, தேர்வு நான்கு பிரிவுகளைக் கொண்டதாய் இருக்கும். முதல் பிரிவில் உள்ள இரண்டு பகுதிகள் தேர்வர்களின் மொழியறிவுத் திறனை சோதிப்பதாக அமையும். இரண்டாவது பகுதி மாணவர்களின் துறை சார்ந்த அறிவை சோதிக்கும். மூன்றாவது பிரிவு, மாணவர்களின் பொது அறிவு மற்றும் தன்னிறைவை பரிசோதிக்கும்.
மாநிலப் பாடத்திட்டங்களில் படித்து அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், இந்த இந்த நுழைவுத் தேர்வின் (Objective Types quetions) அடிப்படையிலேய மத்தியப் பல்கலைக்கழகங்களில் இனி மாணவர் சேர்கை நடைபெறும்.
அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். cuet.samarth.ac.in மற்றும் www.nta.ac.in
வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். t: cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.
நுழைவுத் தேர்வு: அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும், பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை (National Testing Agency-NTA) நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (Common University Entrance Examination - CUET) மூலம் மட்டுமே நடைபெறும். பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (CUET) மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், மாநிலப் பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.