• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • மத்திய அரசு பணியிடங்கள், வங்கிகளுக்கு இனி ஒரே தேர்வு!

மத்திய அரசு பணியிடங்கள், வங்கிகளுக்கு இனி ஒரே தேர்வு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

மத்திய அரசு பணியிடங்கள், வங்கி, ரயில்வே பணிகளுக்கு அடுத்த ஆண்டு 2021 முதல் ஆன்லைனில் ஒரே தேர்வு நடத்தப்படும்.

  • Share this:
    ரயில்வே, வங்கி உள்ளிட்ட மத்திய அரசு பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஒரே தேர்வு நடத்தப்படும் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

    டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசில் குரூப்-பி மற்றும் சி பிரிவு பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுகளில் ஆண்டுக்கு இரண்டரை கோடி பேர் பங்கேற்பதாகக் கூறினார். மேலும், வங்கி, ரயில்வே பணிடங்களுக்கு தனித்தனியாக தேர்வு நடத்தப்படுவதால் தேர்வர்கள் தேர்வில் பங்கேற்பதில் சிக்கல் இருப்பதுடன், விண்ணப்பங்களுக்கு தனித்தனியாக கட்டணம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

    இதனால், மத்திய அரசு பணியிடங்கள், வங்கி, ரயில்வே பணிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் ஒரே தேர்வு நடத்த உள்ளதாகவும், அதில் பெறும் மதிப்பெண்கள் மூன்றாண்டுகளுக்கு செல்லும் என்றும் கூறினார். ஆன்லைன் தேர்வு நடத்துவதற்காக தேசிய தேர்வு முகமையை உருவாக்க உள்ளதாகவும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: