கர்நாடகாவில் கல்லூரிகள் திறக்கும் தேதியை அறிவித்த கல்வித்துறை அமைச்சர்

மாணவ-மாணவிகளுக்கு உரிய பாதுகாப்புடன் கர்நாடகத்தில் அக்டோபர் 1-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயண் அறிவித்தார்.

கர்நாடகாவில் கல்லூரிகள் திறக்கும் தேதியை அறிவித்த கல்வித்துறை அமைச்சர்
கோப்பு படம்
  • Share this:
அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் கல்லூரிகளை திறப்பதற்கு கர்நாடக மாநிலம் தயாராகி வருகிறது. செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்று அம்மாநில துணை முதலமைச்சரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான அஸ்வத் நாராயணன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கல்வி ஆண்டு தொடங்கியதும், இளங்கலை, பொறியியல், பட்டயப்படிப்பு மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் திட்டமிடப்பட்டு நடத்தப்படும் என்றும் ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.கல்லூரி திறப்பு தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு காத்திருப்பதாகவும், அதனை பொறுத்து மாநில அரசு கூடுதல் உத்தரவுகளை பிறப்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க...நடமாடும் ரேஷன் கடையால் தற்போது செயல்படும் ரேஷன் கடைகள் மூடப்படுமா? அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்

அடுத்த மாதம் முதல் அனைத்து கல்வி நடவடிக்கையிலும் ஆன்லைன் பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அஸ்வத் நாராயணன் கூறியுள்ளார்.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading