Home /News /education /

சென்னையில் இலவச அரசு கல்லூரி விடுதிகள்: 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னையில் இலவச அரசு கல்லூரி விடுதிகள்: 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

காட்சிப் படம்

காட்சிப் படம்

 ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னை மாவட்டத்தில் உள்ள கல்லூரி விடுதிகள் தங்கும் மாணவ, மாணவியர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் உ.அமிர்த ஜோதி,  வெளியிட்ட செய்திக் குறிப்பில்;

    சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர்/ சிறுபான்மையினர் கல்லூரி மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென 16 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மாணவியர்கள் விடுதி எண்ணிக்கை ஐந்து ஆகும்.  

    யார் விண்ணப்பிக்கலாம்:   சென்னையில் இயங்கி வரும் கல்லூரி/ பாலிடெக்னிக்/ ஐடிஐ/பட்டப்படிப்பு/ பட்ட மேற்படிப்பு  படிப்புகளில் பயிலும் மாணவ/மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். பிவ/பிபிவ/சீம விடுதிகளில் அணைத்து வகுப்பை சார்ந்த மாணவ /மாணவிகளும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விகிதாச்சாரம்  அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

    இதையும் வாசிக்கபள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யும் நடைமுறை ரத்து

    அனைத்து விடுதி மாணவ/மாணவியர்களுக்கும் உணவும், தங்கும் வசதியும் இலவசமாக அளிக்கப்படும்.

    சேருவதற்கான தகுதிகள்:  பெற்றோர்/பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தில் தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.

    தகுதியுடைய  மாணவ/ மாணவியர் விண்ணப்பபங்கள் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர்/காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலுள்ள இரண்டாம் தளத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    இதையும் வாசிக்க:  நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டு எப்போது வெளியாகும்?

    கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.07.2022 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரி மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கும் போது, சாதி மற்றும்  பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கலாம் அல்லது விடுதியில் சேரும் பொழுதும் இச்சான்றிதழ்களை அளிக்கலாம்.

    ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன

    ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளவும் அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கிப்பயிலவும் அனுமதிக்கப்படுவர். எளயே, மாணவ/மாணவியர் அரசின் இச்சலுகைகளைப் பெற்று பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் உ.அமிர்த ஜோதி,  தெரிவித்துள்ளார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: College, College Admission

    அடுத்த செய்தி