Home /News /education /

சீட் கிடைத்தும், தனியார் காலேஜ் என்பதால் ஒதுக்கீட்டு ஆணையை பெறாமல் சென்ற மாணவர்கள் மீண்டும் ஒதுக்கீட்டு ஆணையை வழங்கியது அரசு

சீட் கிடைத்தும், தனியார் காலேஜ் என்பதால் ஒதுக்கீட்டு ஆணையை பெறாமல் சென்ற மாணவர்கள் மீண்டும் ஒதுக்கீட்டு ஆணையை வழங்கியது அரசு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தனியார் மருத்துவக் கல்லூரிக்கான கட்டணம் செலுத்த முடியாமல் ஒதுக்கீட்டு ஆணையை விட்டுச் சென்ற மாணவர்களுக்கு ஆணை வழங்கப்பட்டது

    நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்ட முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதனையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க மசோதா நிறைவேற்றி அரசாணையும் வெளியிட்டது. அதனையடுத்து, இந்த முறை 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கப்பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் செலுத்த முடியாத சூழல் இருந்தது.

    அதனால், தமிழக மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்து ஆனால் கட்டணம் செலுத்த முடியாமல் ஒதுக்கீட்டு ஆணையை பெறாமல் சென்று விட்டனர். திருப்பூரைச் சேர்ந்த திவ்யா, ஈரோடு கவுஷிகா ஆகிய இரண்டு மாணவிகள் 19 ஆம் தேதி கலந்தாய்வில் பங்கேற்று தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் இடங்களை தேர்வு செய்தனர். ஆனால் கட்டணம் செலுத்த முடியாது என ஒதுக்கீட்டு ஆணைகளை மட்டும் பெறாமல் சென்றுவிட்டனர்.

    7.5 உள் இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கட்டணங்களை அரசே செலுத்தும் என்ற முதல்வரின் அறிவிப்பை அடுத்து இவர்கள் இன்று மருத்துவக் தேர்வுக் குழுவினால் அழைக்கப்பட்டு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணைகளை பெற்றுச் சென்றனர்.


    இதேபோல் தாரணி என்ற மாணவி பி.டி.எஸ் ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுச் சென்றார். இது கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். கல்லூரியே தேர்வு செய்யாமல் வேண்டாம் என்று கூறிச் சென்ற மாணவர்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Medical education

    அடுத்த செய்தி