முகப்பு /செய்தி /கல்வி / கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு

கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு

மாணவர் சேர்க்கை

மாணவர் சேர்க்கை

சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு 5 நாட்கள் வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படும்- உயர்கல்வித் துறை அமைச்சர்

  • Last Updated :

மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

முன்னதாக, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 20ம் தேதி வெளியிடப்பட்டன. இதனையடுத்து, தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இணைய வழி மாணவர்கள் சேர்க்கை கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. ஜுலை 7ம் தேதி வரை (நேற்று வரை) விண்ணப்பபங்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் அதற்கு சமமான கல்வியில்  இதர வாரியத்தில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத காரணத்தினால்,  கலை மற்றும் அறிவியல் கல்லூரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு 5 நாட்கள் வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று தெரிவித்தார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " சிபிஎஸ்இ மாணவர்கள் மற்றும் +2 மாணவர்கள் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு , 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கும் இந்த நீட்டிப்பு பொருந்தும்" என்று தெரிவித்தார்.

மேலும், இதுவரை அரசு கலை கல்லூரிகளுக்கு 3 லட்சத்து 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழக அரசுத் தரப்பிலும், தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு சிபிஎஸ்இயிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த கால நீட்டிப்பு என்பது அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்தார்.

இதையும் வாசிக்க: கணினி அறிவியலில் மக்களிடம் நற்பெயர் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் -அண்ணா பல்கலை வெளியீடு..

மாணவர்கள் சேர்க்கை: 

விண்ணப்பத்தை https://www.tngasa.in/ என்ற இணையதளம் வாயிலாக வீட்டிலிருந்தோ அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமாயினும் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம். இணையதள வசதி இல்லாதவர்கள், அருகிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக் கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கை உதவி மையம் மூலம் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே, இந்த கால நீட்டிப்பை பயன்படுத்தி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

TAMIL NADU GOVERNMENT ARTS AND SCIENCE

COLLEGES ADMISSIONS - 2022

First published:

Tags: College Admission, Engineering counselling