12-ம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது...!

12-ம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது...!

12-ம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வு

கொரொனோ காரணமாக நீண்ட நாட்கள் வகுப்புகள் நடைபெறாத நிலையில் பாடங்களுக்கான செய்முறை பயிற்சிகள் குறைக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் 12-ம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

கொரொனோ காரணமாக நீண்ட நாட்கள் வகுப்புகள் நடைபெறாத நிலையில் பாடங்களுக்கான செய்முறை பயிற்சிகள் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 7,000 மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் 3,00,000 அதிகமான மாணவர்களுக்கு செய்முறை பொதுத்தேர்வுகள் நடைபெறுகிறது. செய்முறை தேர்வுகளை நடத்துவதற்கு உரிய வழிக்காட்டு நெறிமுறைகளை அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

வேதியியல் செய்முறைத் தேர்வில் பிப்பெட் உபகரணத்தை மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் வாய்வழியாக ரசாயணங்களை உறிய இந்தக் கருவி பயன்படும் என்பதால் இதனை பயன்படுத்த வேண்டாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.அதேபோல தாவரவியல் மற்றும் உயிரியல் பாட செய்முறைத் தேர்வில் மைக்ரோஸ்கோப் பயன்படுத்த கூடாது என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் கண்களை மைக்ரோஸ்கோப் லென்ஸ் அருகே கண்களை பதித்து செய்முறை தேர்வில் ஈடுபடுவார்கள் என்பதால் மைக்ரோஸ்கோப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Also read... உயர்கல்வியில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு சட்ட மசோதாவை அமல்படுத்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வித்துறை உத்தரவு..

கொரொனோ காரணமாக வகுப்புகள் நடைபெறாத நிலையில் செய்முறை தேர்வுகளுக்கான பயிற்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. உரியமுறையில் செய்முறைத் தேர்வுகளை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அசோக்நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செய்முறை தேர்வுகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு விதித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி செய்முறைத் தேர்வுகள் நடைபெறுவதாக தெரிவித்தார். மேலும் மாணவர்கள் கொரோனா அறிகுறிகளுடன் இருந்தால் அவர்களுக்கு வேறு ஒரு தேதியில் செய்முறைத் தேர்வுகளை நடத்தப்படும் என்றும் கூறினார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: