புதுச்சேரியில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு - புதுச்சேரி அரசு அறிவிப்பு..

புதுச்சேரியில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு - புதுச்சேரி அரசு அறிவிப்பு..

தேர்வு

புதுச்சேரி மாநிலத்தில் பயிலும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

  • Share this:
புதுச்சேரியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், பிளஸ் 2 மாணவர்களுக்காக பள்ளிகளை நடத்தக் கூடாது என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் மைக்கெல் பெனோ பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘தமிழக தேர்வுத்துறை இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, மே 5 ம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலும் நடைபெறுவதாக இருந்த தமிழக கல்வி வாரியத்தின் கீழ் பயின்ற பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட தேர்வு நடைபெறும் நாள் குறித்த அறிவிப்பு, தமிழக கல்வி வாரிய இயக்குநரால் தேர்வு நடைபெறும் 15 நாள்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்படும்.

பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பிளஸ் 2 மாணவர்களுக்கு எந்த வடிவம் அல்லது முறையிலும் வகுப்புகளை நடத்தக் கூடாது. பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை எந்த நோக்கத்துக்காகவும் பள்ளிகளுக்கு வர அறிவுறுத்தக் கூடாது.

கொரோனா வைரஸ் தொற்றின் 2 வது அலை பரவி வரும் நிலையில், பள்ளிகளில் வகுப்புகள், நிகழ்ச்சிகள், சிறப்பு வகுப்புகள், படிப்பில் சுமாரான மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு, டியூசன் உள்ளிட்ட எந்தவித கல்வி நடவடிக்கைகளையும், எந்த வடிவத்தில் அல்லது முறையிலும் நடத்தக் கூடாது. மேற்கண்டவற்றை மிகவும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இதுதொடர்பான விதிமீறல் மற்றும் புகார்கள் தீவிரமாக பார்க்கப்படும். விதிமீறல்களுக்கு குறிப்பிட்ட பள்ளியே முழுப் பொறுப்பேற்க வேண்டும்’என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Ramprasath H
First published: