ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முறையில் மாற்றம்...! ஏழை, எளிய மாணவர்களை ஒதுக்குகிறதா யு.பி.எஸ்.சி?

பயிற்சி காலத்தில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாக தேர்வு செய்யப்படுவார்கள் என மத்திய அரசு கூறுகிறது. 

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முறையில் மாற்றம்...! ஏழை, எளிய மாணவர்களை ஒதுக்குகிறதா யு.பி.எஸ்.சி?
மாதிரிப்படம்
  • Share this:
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் தற்போது உள்ள நடைமுறையை மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முறையால் கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாணவர்கள் கடும் பாதிப்படைவார்கள் என கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

சிவில் சர்வீஸ் பணியின் கீழ் வரும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 23 வகையான அரசு பணிகளுக்கு தற்போதுள்ள நடைமுறைப்படி யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்துகிறது.

அதன்படி, முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, பின்னர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


ஆனால், இந்த நடைமுறையில் மத்திய அரசு தற்போது மாற்றம் கொண்டு வருகிறது. அதன்படி, முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி அகாடமிக்கு செல்ல வேண்டும்.

அங்கு அவர்களுக்கு 4 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். அந்த பயிற்சி காலத்தில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாக தேர்வு செய்யப்படுவார்கள் என மத்திய அரசு கூறுகிறது.

இதனால் கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாணவர்கள் கடும் பாதிப்படைவார்கள் என கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.தேர்வுகளில் குறைவான மதிப்பெண் எடுத்த ஒருவர், பயிற்சி கால மதிப்பெண்ணில் அதிகம் எடுத்தால், அவர்கள் தகுதிக்கு மீறிய பதவிக்கு வந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நடைமுறை திறமையான அதிகாரிகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என உளவியலாளர்கள் கூறியுள்ளனர்.

பயிற்சிக்காலம் என்பது தேவையான ஒன்றுதான். ஆனால் அதையே பணி ஒதுக்குவதற்கான தகுதியாக மாற்றக்கூடாது என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

Also watch: நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதர்! 

First published: August 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading