சிப்பெட் நிறுவனத்தில் டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

news18
Updated: June 13, 2018, 6:56 PM IST
சிப்பெட் நிறுவனத்தில் டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னையிலுள்ள சிப்பெட் வளாகம்
news18
Updated: June 13, 2018, 6:56 PM IST
மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிப்பெட்) பல்வேறு டிப்ளமோ படிப்புகளுக்கான சேர்க்கை  குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சிப்பெட் நிறுவனத்தில் மூன்றாண்டு டிப்ளமோ படித்தவர்கள் லேட்டரல் முறையில் (Lateral Entry) அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்புகளில் சேரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்பெட் நிறுவனம் சார்பில் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் தொடர்பான டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ பயிற்சிகள்  வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் 2018-19-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) அங்கீகரம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர் சேர்க்கை ஆன்லைன் வழியாக மேற்கொள்ளப்படுகிறது.

ஒன்றரை ஆண்டு காலத்துக்கான முதுநிலை டிப்ளமோ படிப்புகள்: பிளாஸ்டிக் பதனீட்டுத் தொழில்நுட்பம் (PGD-PPT),  பிளாஸ்டிக் ஆய்வு மற்றும் தரக்கட்டுப்பாடு (PGD-PTQC) ஆகியவற்றில் சேருவதற்கு வேதியலை ஒரு பாடமாகக் கொண்ட பி.எஸ்ஸி., அறிவியல் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

CAD/CAM பயிற்சியுடன் கூடிய பிளாஸ்டிக் வடிவமைப்பு (PD-PMD with CAD/CAM) படிப்பில் சேருவதற்கான கல்வித் தகுதி: இயந்திரவியல் (Mechanical),  பிளாஸ்டிக் தொழில்நுட்பம் (Plastic Tech.,) கருவி மற்றும் உற்பத்திப் பொறியியல் (Tool/Production Engineering), மெக்கட்ரானிக்ஸ் (Mechatronics), ஆட்டோமொபைல் என்ஜினியரிங் (Automobile Engineering), கருவி மற்றும் வார்ப்பியல் (Tool and Die Making) ஆகிய 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள் மற்றும் சிப்பெட்டில் DPMT / DPT ஆகிய படிப்புகளையோ அவற்றுக்கு இணையான படிப்புகளையோ முடித்தவர்கள் தகுதியுள்ளவர்கள் ஆவர்.

மூன்றாண்டு கால டிப்ளமோ படிப்புகள்: பிளாஸ்டிக் அச்சுவார்ப்பியல் தொழில்நுட்பம் (Plastic Mould Technology) மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம் (Plastic Technology) ஆகிய மூன்றாண்டு டிப்ளமோ படிப்புகளில் சேர குறைந்தது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Loading...
இதற்கான நுழைவுத் தேர்வை எழுதுவது குறித்த விவரங்களை அறிய  www.cipet.gov.in என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

விண்ணப்பப் படிவங்கள் வந்து சேருவதற்கான கடைசி தேதி :  27.6.2018

நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி : 1.7.2018

மாணவர் சேர்க்கை குறித்து அறிய தொடர்பு எண்கள்: எம்.பீர்முகமது மேலாளர் (9677123882),  ஜி. சுரேஷ் தொழில்நுட்ப அலுவலர் (9444699936).
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...