ஹோம் /நியூஸ் /கல்வி /

பள்ளி, கல்லூரிகள் திறப்பு : அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

பள்ளி, கல்லூரிகள் திறப்பு : அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

ஆசிரியர்களில் 90.11 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

  தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தாலும் பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாணவ-மாணவிகள் சுகாதார முறையில் பள்ளிகளில் பயில ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

  இந்நிலையில், பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். முதலமைச்சர் நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களின் நலன் கருதி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடுமுழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் மட்டும் 10, 12ஆம் வகுப்புத் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது. ஆனால், மாணவர்கள் சிலர் கொரோனாவில் பாதிக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டன.

  இதனால், கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடக்காமலேயே மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலேயே ஆன்-லைன் வகுப்புகளைப் படித்து முடங்கி இருக்கும் மாணவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளன. தொற்று குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

  Must Read : பள்ளிகளை திறக்க வேண்டாம் - எய்ம்ஸ் பேராசிரியர் எச்சரிக்கை.!

  இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவர் நவீத் விக், கொரோன சூழலில் வீட்டில் ஆன்லைன் மூலம் கற்கும் குழந்தைகள் வீட்டில் சோர்வாக இருந்தாலும், பள்ளிகளில் சேர்வதால் ஏற்படும் அபாயங்களைப் பார்ப்பது முக்கியம். நாம் நன்மை தீமைகளை எடைபோட வேண்டும். குழந்தைகளுக்கு வீட்டில் கற்கும் சூழல் பற்றி பேசும் நாம், நாம் அபாயங்களையும் பார்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தமிழகத்தைப் பொறுத்தவரையில். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட இருக்கும் சூழலில் ஆசிரியர்களில் 90.11 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Suresh V
  First published:

  Tags: MK Stalin, News On Instagram, School Reopen