பள்ளி திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் பள்ளி திறப்பு குறித்து முதல்வர்தான் இறுதி முடிவு எடுப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளி திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
அமைச்சர் செங்கோட்டையன்
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2020, 2:04 PM IST
  • Share this:
ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்குட்டபட்ட நாகதேவன்பாளையம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. அதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். பின்னர், சிறுவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சார்பில் 46 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான கன்று வளர்ப்பு உள்ளிட்ட பல்வகை கடன் பெறுவதற்கான ஆணையை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர்தான் இறுதி முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.

பின்னர் மாணவர்கள் சேர்க்கை தேதி நீடிப்பு குறித்து அனைத்து துறையினருடனான ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என கூறினார். வரும் ஒன்றாம் தேதி முதல் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் விருப்பப்பட்டால் பள்ளிகளுக்கு வந்து சந்தேகங்களை கேட்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க,,Photos | திருப்பதி பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று சர்வ பூபால வாகனசேவை


குஜராத்தில் தமிழ் பள்ளி மூடப்பட்டது குறித்து முதலமைச்சர் ஆராய்ந்து முடிவெடுப்பார் என அவர் தெரிவித்தார்.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading