ஹோம் /நியூஸ் /கல்வி /

பொதுத்தேர்வு எழுத உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் மூலம் ஆன்லைன் வகுப்பு

பொதுத்தேர்வு எழுத உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் மூலம் ஆன்லைன் வகுப்பு

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி (File Image)

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி (File Image)

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏற்கனவே அரசு சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளதால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

  • News18
  • 2 minute read
  • Last Updated :

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும், 6000 மாணவர்களுக்கு  ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 9ம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கும் மட்டும் வரும் ஜூன் 15ம் தேதி பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

கொரோனா பரவல் தொடர்ந்து நீட்டித்து வருவதால், மீண்டும் பள்ளிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலை உள்ளது. தனியார் பள்ளி, கல்லூரிகள், மாணவர்களுக்கு ஆன் - லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முடித்து, பத்தாம் வகுப்பு செல்லும் மாணவர்கள் மற்றும் பிளஸ் 1 வகுப்பு முடித்து பிளஸ் 2 செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் ஒவ்வொரு பாடம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏற்கனவே அரசு சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளதால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும், 6000 மாணவர்களுக்கு  ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

ஜூன் 1ம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும், ஸூம் செயலி மூலம் இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளது எனவும், இதனை தொடர்ந்து யூடியூப் நேரலை மூலமும் பாடங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Sankar
First published:

Tags: S.P. Velumani