ஆங்கிலத்தில் அசத்தும் சென்னை அரசுப் பள்ளி மாணவர்கள்...!

ஆங்கிலத்தில் அசத்தும் சென்னை அரசுப் பள்ளி மாணவர்கள்...!
எம்.ஜி.ஆர். நகர் அரசு பள்ளி மாணவர்கள்
  • News18
  • Last Updated: December 6, 2019, 1:22 PM IST
  • Share this:
அரசு பள்ளி மாணவர்கள் என்றாலே ஆங்கிலம் வராது என்ற நிலை மாறி, தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக ஆங்கிலத்தில் அசத்தி வருகின்றனர் சென்னை எம்.ஜி.ஆர். நகர் அரசு பள்ளி மாணவர்கள்.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் அரசு பள்ளி மாணவர்கள் relay game முறையில் குழுவாக அமர்ந்து கொள்ள, ஆசிரியர் மாணவர் ஒருவரிடம் ஆங்கில வாக்கியத்தை கூறுகிறார். அதை அருகில் இருப்பவர்களிடம் பகிற, இறுதியாக உள்ள மாணவர் அந்த வாக்கியம் என்ன என்பதை உரக்கச் சொல்லுவார். மற்ற கற்பித்தல் முறைகளைவிட இது மாறுபட்டு இருப்பதால் மாணவர்கள் மனதில் ஆங்கில வார்த்தைகள் எளிதாக பதிகின்றன.

ஒரு வார்த்தையை ஆங்கிலத்தில் சொல்லவே திக்கித் திணறிய தாங்கள் இன்று சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதுடன், பிழையில்லாமல் எழுதவும் முடிவதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


அரசுப் பள்ளியிலும் ஆங்கிலக் கல்வி சிறப்பாக போதிக்கப்படுவதை அறிந்த பெற்றோரும், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக எம்.ஜி.ஆர். அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் எடுத்துள்ள இந்த புதுமையான முயற்சி அரசு பள்ளிகள் மீதான நம்பிக்கையினை அதிகரித்துள்ளது. அத்துடன் ஆங்கிலம் எளிதாக பேசுவதும் ,படிப்பதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனி என்றிருந்த நிலையை மாற்றியுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.

Also see...
First published: December 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading