Home /News /education /

கேட் தேர்வுக்கு தயாராகுறீர்களா? உங்களுக்கு உதவும் சென்னை ஐஐடி-ன் 'NPTEL GATE'

கேட் தேர்வுக்கு தயாராகுறீர்களா? உங்களுக்கு உதவும் சென்னை ஐஐடி-ன் 'NPTEL GATE'

கேட் தேர்வு போர்ட்டல்

கேட் தேர்வு போர்ட்டல்

NPTEL GATE: கேட் பாடத் திட்டத்தின் அடிப்படையில் வீடியோ தீர்வுகள், செய்முறைத் தேர்வுகள், ஆன்லைன் உதவிகள் ஆகியவை புதிய போர்ட்டல் மூலம் வழங்கப்படும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கேட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படும் வகையில், 'NPTEL GATE' என்ற ஆன்லைன் போர்ட்டலை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.

    நாட்டின் முன்னணிப் பயணத் தொழில்நுட்ப நிறுவனமான அமெடியஸ் லேப்ஸ் பெங்களூரு (Amadeus Labs Bengaluru) வின் சமூகப் பொறுப்பு நிதியுதவியுடன் இந்த போரட்டல் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாது: "கேட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் எண்ணத்துடன், இந்தியாவின் முன்னணிப் பயணத் தொழில்நுட்ப அமைப்பான அமெடியஸ் லேப்ஸ் பெங்களூரு-வின் சமூகப் பொறுப்பு நிதியுதவியுடன் இயங்கும் 'NPTEL GATE' போர்ட்டலை அனைத்து மாணவர்களும் கட்டணம் ஏதுமின்றிப் பயன்படுத்தலாம். என்பிடெல் (NPTEL) என்பது ஐஐடிக்கள், ஐஐஎஸ்சி ஆகியவற்றின் கூட்டுமுயற்சியில், கட்டணமின்றி ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை வழங்கும் திட்டமாகும்.

    ஐஐடிக்கள், ஐஐஎஸ்சி ஆகியவற்றில் முதுநிலைப் படிப்பு அல்லது பிஎச்.டி.யில் சேரவும், ஏனைய புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கவும் நாடு தழுவிய அளவில் நுழைவுத் தேர்வாக பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு (GATE) இருந்து வருகிறது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் கேட் மதிப்பெண் அடிப்படையிலேயே வேலைக்கு நபர்களை நியமிக்கின்றன.

    இதையும் வாசிக்க:  மருத்துவம்,பொறியியல் என அனைத்து பாடங்களுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு - யுஜிசி பரிசீலனை 

    என்பிடெல் வசமுள்ள 2,400க்கும் மேற்பட்ட தலைப்புப் பக்கங்களில் இருந்து பொறியியல், அறிவியல் ஆகியவற்றில் தற்போதைய பாடத் திட்டங்களுக்கு ஏற்ப பாடத் தொகுப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும். அத்துடன் கேட் பாடத் திட்டத்தின் அடிப்படையில் வீடியோ தீர்வுகள், செய்முறைத் தேர்வுகள், ஆன்லைன் உதவிகள் ஆகியவை புதிய போர்ட்டல் மூலம் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுளளது.

    இந்த போர்ட்டலின் முதல் பதிப்பு அக்டோபர் 2021ல் தொடங்கப்பட்டு, கேட் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாகவும், அடுத்த ஆண்டு கேட் தேர்வை ஏறத்தாழ 9 முதல் 10 லட்சம் மாணவர்கள் எழுதக்கூடும் என்பதால், நாடு முழுவதும் தேர்வுக்குத் தங்களை தயார்படுத்துவோருக்கு இந்த போர்ட்டல் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வாய்ப்பை வழங்கும் என்றும் சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

    https://gate.nptel.ac.in என்ற இணையத் தொடர்பு மூலம் இந்த போர்ட்டலை பயன்படுத்தலாம்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Chennai IIT

    அடுத்த செய்தி