பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த, தகுதிவாய்ந்த பி.டெக். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக, பவர் கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியாவுடன், ஐஐடி மெட்ராஸ் உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடி-யில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக, கல்வி உதவித்தொகை நிதியம் ஒன்றை ஏற்படுத்த, பவர் கிரிட் கார்ப்பரேசன் நிறுவனம், தனது பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியத்திலிருந்து (சிஎஸ்ஆர்) ரூ.10.5 கோடியை வழங்கியுள்ளது.
இந்த நிதியம், சென்னை ஐஐடியில் பயிலும் தகுதிவாய்ந்த மாணவர்களின் கல்விக்கட்டணத்தை, கல்வி உதவித் தொகை வாயிலாக செலுத்த உதவும். 2021-22 நிதியாண்டில், பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியத்திலிருந்து, ஐஐடி மெட்ராஸ் ஒரே நிறுவனத்திடமிருந்து பெற்ற அதிகபட்ச தொகை இதுவாகும்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சென்னை ஐஐடி-யின் டீன் பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னூலா, பவர் கிரிட் கார்ப்பரேசன் நிறுவனத்தின் இயக்குனர்(பணியாளர்) வி.கே.சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி-யின் இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி, ‘அனைவருக்குமான கல்வி நிறுவனம்’ என்பது தான் ஐஐடி மெட்ராஸின் குறிக்கோள் என்றார். பி.எஸ்.சி. பட்டப்படிப்பு, தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது போன்ற சென்னை ஐஐடி-யின் முயற்சிகள், இந்த நிறுவனத்தை அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக மாற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அனைவருக்கும் தரமான கணினி அறிவியல் பாடம் - சென்னை ஐ.ஐ.டியின் புதிய முயற்சி
பவர் கிரிட் கார்ப்பரேசனின் இயக்குனர் வி.கே.சிங் பேசுகையில், இந்த கல்வி உதவித்தொகை திட்டம், மக்களிடமிருந்து கிடைக்கும் வருமானத்தை சமுதாயத்திற்கே திருப்பி வழங்குவதற்கான நேரடி வழிமுறை என்பதில், தமது நிறுவனம் நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறினார். கல்விக் கட்டண உயர்வு காரணமாக, மாணவர்களின் படிப்புச் செலவுக்கான பணத் தேவைகளும் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், இந்த உதவித் தொகையை பெற்று பயனடையும் மாணவர்களின் வாழ்க்கையில், உண்மையிலேயே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் வி.கே.சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான தகுதிகள்:
இந்திய அரசின் ஆணைப்படி தற்போது நடைமுறையிலுள்ள இடஒதுக்கீட்டால் கவரப்படும் பிரிவினர்களான,
1.பட்டியல் கண்ட சாதிகள் (SC)
2.பட்டியலின பழங்குடியினர்(ST)
3.சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்(OBC)
முழுநேர முனைவர் பட்டம்: ரூ.1 லட்சம் கல்வி ஊக்கத்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஆகியோர் அல்லாத மற்றும் ரூ.8லட்சத்திற்கு குறைவாக குடும்ப ஆண்டு வருமானம் கொண்டவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் பலன்களை பெற தகுதியுடையவர்கள் ஆவர். எனவே, இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கும் மட்டும் இந்த தொகை வழங்கப்படுமா (அல்லது) அனைத்து பிரிவினரில் உள்ள ஏழை மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படுமா என்பது தெளிவாக தெரியவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai IIT, IIT Madras