Home /News /education /

சித்த மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் சென்னை ஐஐடி: சித்த மருத்துவ நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சித்த மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் சென்னை ஐஐடி: சித்த மருத்துவ நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சித்த மருந்துகளின் செயல்திறனை விளக்கும் அறிவியல் அடிப்படையை உருவாக்க இந்த கூட்டாண்மை கவனம் செலுத்தும்

சித்த மருந்துகளின் செயல்திறனை விளக்கும் அறிவியல் அடிப்படையை உருவாக்க இந்த கூட்டாண்மை கவனம் செலுத்தும்

சித்த மருந்துகளின் செயல்திறனை விளக்கும் அறிவியல் அடிப்படையை உருவாக்க இந்த கூட்டாண்மை கவனம் செலுத்தும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சித்த மருத்துவ பயிற்சி, ஆராய்ச்சி, மருத்துவ ஆய்வுகள் போன்றவற்றை  சென்னை சித்த மருத்துவ நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள சென்னை ஐஐடி முடிவு செய்துள்ளது.

    சித்த மருத்துவ முறையில் ஆராய்ச்சி மற்றும் உயர்கல்விக்கான சிறப்பு மையமாக  சென்னை சித்த மருத்துவ நிறுவனம் (என்.ஐ.எஸ்) விளங்குகிறது. அறிவியல் மற்றும் தொழிநுட்ப பாடப்பிரிவுகளில் முன்னணி நிறுவனமாக சென்னை ஐஐடி விளங்குகிறது.

    இந்நிலையில், சித்த மருத்துவம் கூட்டாண்மை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில்  ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, என்.ஐ.எஸ். இயக்குநர் டாக்டர் ஆர்.மீனாகுமாரி தலைமையில் கையெழுத்தானது.

    இது தொடர்பாக, சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், " புதிய பாடத் திட்டங்களை கூட்டாக மேம்படுத்துதல், மருத்துவ ஆராய்ச்சி, மூலக்கூறு உயிரியல் மற்றும் ஆய்வக செல்வரிசை ஆராய்ச்சி, சுகாதார அமைப்பு ஆராய்ச்சி உள்ளிட்டவைகளை செயல்படுத்துதல், ஆசிரியர்களை பரிமாறிக் கொள்ளுதல் போன்றவற்றுக்கு இந்த கூட்டாண்மை உதவும்" என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த கூட்டுமுயற்சியின் தாக்கம் குறித்து எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் காமகோடி,"இந்திய மருத்துவத்தில் சித்தா மிக முக்கிய புள்ளியாகும். சித்த மருந்துகளின் செயல்திறனை விளக்கும் அறிவியல் அடிப்படையை உருவாக்க இந்த கூட்டாண்மை கவனம் செலுத்தும்" எனக் குறிப்பிட்டார்.

    கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், வெப்மினார்கள், மாநாடுகள், பாடத் திட்டங்களைத் தொடருதல் [தொடர் மருத்துவக் கல்வி (CME) உள்பட], கல்வித் திட்டங்களை உருவாக்குதல் ஆகிய பணிகளை இரு கல்வி நிறுவனங்களும் கூட்டாக மேற்கொள்ளும். கற்பித்தல் மற்றும் பயிற்சிக்காக மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், முதுநிலை ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்களை பரிமாறிக் கொள்ளவும் இக்கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்கும் என்றும் கூறினார்.

    இதையும் வாசிக்க: அறிவியல் ரீதியான சாலைப் பாதுகாப்பு: தமிழக அரசுடன் கைகோர்க்கும் சென்னை ஐஐடி

    இந்த கூட்டாண்மை ஏற்படுத்தும் விளைவுகள் குறித்துப் பேசிய தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் (NIS) இயக்குநர் டாக்டர் ஆர். மீனாகுமாரி,"நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி மெட்ராஸ்-உடன் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சித்த மருத்துவத்தில் உள்ள அளப்பரிய சிகிச்சைத் திறனைப் பரிமாறிக் கொள்ளவும், சித்த மருத்துவத்தின் தன்மைகளை அறிவியல் ரீதியாக சரிபார்த்தல், அதன் உயிரியக்க மூலக்கூறு மற்றும் செயல்படும் முறைகளை ஐஐடிஎம்-ன் அதிநவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கண்டறிதல் போன்றவற்றுக்கு இந்த கூட்டாண்மை புதிய வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்புகிறோம்" என்றார்.

    இதையும் வாசிக்க: சென்னை ஐஐடியில் பிஎஸ் பட்டப்படிப்பு: 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

    டாக்டர் மீனாகுமாரி மேலும் கூறுகையில், "இரு கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்பால் மூலிகை ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய முக்கிய துறைகளில் மாணவர்களின் திறமை அதிகளவில் வெளிப்படும். பாரம்பரிய மருத்துவ முறைகளை தொழில்நுட்ப ரீதியாக அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இக்கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைக்கும். ஐஐடிஎம்.-உடன் இணைந்து பணியாற்றுவதால் இருதரப்பினரும் பயனடைவதுடன், சித்த மருத்துவ முறையையும் மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கிறோம்." எனத் தெரிவித்தார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Chennai IIT, Medicines

    அடுத்த செய்தி