Home /News /education /

இந்தியாவின் அறிவுசார் பங்களிப்பு என்ன? சென்னை ஐஐடி புது முயற்சி

இந்தியாவின் அறிவுசார் பங்களிப்பு என்ன? சென்னை ஐஐடி புது முயற்சி

சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி

ஆராய்ச்சிகளை வெளியிடுதல், கல்விக் கருத்தரங்கு மற்றும் மாநாடுகளை நடத்துதல், நான்கு கருப்பொருள் தொடர்பான பாடப்பிரிவுகளை வடிவமைத்தல் போன்ற பணிகளை இந்த மையம் மேற்கொள்ளும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இந்திய அறிவுசார் அமைப்புகளுக்கான (Indian Knowledge Systems) மையத்தை சென்னை ஐஐடி-ன் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை தொடங்கியுள்ளது.

    இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ஐசிசிஆர்) ஒத்துழைப்புடன்  இந்த ஆய்வு மையம் செயல்பட இருக்கிறது. இது தொடர்பான, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சென்னை ஐஐடி- ஐசிசிஆர்- கையெழுத்திட்டன.

    கணிதம் மற்றும் வானியல், கட்டிடக்கலை பொறியியல்- வாஸ்து மற்றும் சிற்பக்கலை, இந்திய அரசியல் மற்றும் பொருளாதார சிந்தனை, இந்திய அழகியல் மற்றும் இலக்கண மரபுகள் ஆகிய நான்கு கருப்பொருள்களில் இந்தியவின் பங்களிப்பு குறித்த விரிவான ஆய்வை இந்த மையம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஆராய்ச்சிகளை வெளியிடுதல், கல்விக் கருத்தரங்கு மற்றும் மாநாடுகளை நடத்துதல், நான்கு கருப்பொருள் தொடர்பான பாடப்பிரிவுகளை வடிவமைத்தல் போன்ற பணிகளை இந்த மையம் மேற்கொள்ளும்.   

    சென்னை ஐஐடி மாணவர்களுக்கு நேரடியாகவும், என்பிடெல் (NPTEL) தளம் மூலமாக இதர கல்லூரி மாணவர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகள் மூலம் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு  பாடத்திட்டத்தை கொண்டு செல்வதற்கான முயற்சிகளை நேற்றைய மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் வாசிக்கநூலக செயலி, பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்... அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்கம்

    இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து சர்வதேச பார்வையாளர்களிடையே விழிப்புணர்வை உருவாக்க இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என ஐசிசிஆர் தலைமை இயக்குநர் குமார் துஹின் தெரிவித்தார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Chennai IIT

    அடுத்த செய்தி