Home /News /education /

சென்னை ஐஐடியில் சேர விருப்பமா? askiitm இணையதளம் உங்களுக்குத் தான்

சென்னை ஐஐடியில் சேர விருப்பமா? askiitm இணையதளம் உங்களுக்குத் தான்

சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி

பெற்றோர் மற்றும் மாணவர்கள் www.askiitm.com– என்ற இணையதளத்தில் ஏற்கனவே இடம்பெற்று இருக்கும் கேள்விகளையோ அல்லது தாங்கள் விரும்பும் கேள்விகளையோ பதிவிடலாம் என்றும் தெரிவித்துள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    நாட்டின் பெரும்பாலான மாணவர்களுக்கு சென்னை ஐஐடி-ல் சேர்ந்து  படிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் குறித்த பல்வேறு தரவுகளை மத்திய/மாநில அரசுகள் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன. நாட்டின் கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்திருப்பதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது போன்ற தரவுகள் சென்னை ஐஐடி-யைப் பற்றிய முழுமையான தகவல்களை கொண்டிருக்கவில்லை.

    அந்நிறுவனத்தில் சேர விரும்பும் மாணவர்கள்,  சமூக ஊடகங்களிலும், பிற ஆதாரங்களிலும் வழியாகவே தங்களுக்கான தகவல்களை கேட்டுப் பெற்று வருகின்றனர். இருப்பினும், இதில் சில தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றதாகவும், போலியானதாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னை ஐஐடி-ல் சேர விரும்புவோருக்கு பலனளிக்கும் வகையில் அந்நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் AskIITM.com என்ற இணையதளத்தைத் தொடங்கி உள்ளனர்.

    இதையும் வாசிக்க: நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழங்கள் அறிவிப்பு.. பட்டங்கள் வழங்கவும் உரிமை இல்லை - யுஜிசி

    இந்த இணையதளத்தின் மூலம், சென்னை ஐஐடி உள்ள ஆசிரியர்கள், உயர்படிப்பு, பணி நியமனங்கள், கல்வியாளர்கள், வளாக வசதிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும்  கேள்விகளையும் அந்நிறுவனத்தின் முன்னாள் மாணவர்களிடம்  நேரடியாக கேட்டு பதில்களைப் பெறலாம்.

    ஐஐடி மெட்ராஸ்-ல் சேர விரும்புவோருக்கு உதவும் நோக்கில் முன்னாள் மாணவர்களின் முன்முயற்சியாக இந்த இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பெற்றோர் மற்றும் மாணவர்கள் www.askiitm.com– என்ற இணையதளத்தில் ஏற்கனவே இடம்பெற்று இருக்கும் கேள்விகளையோ அல்லது தாங்கள் விரும்பும் கேள்விகளையோ பதிவிடலாம் என்றும் தெரிவித்துள்ளது.

    நேற்று, இந்த இணையதள திறப்பு நிகழ்ச்சியில் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி,"விருப்பமுடைய மாணவர்கள் சமூக வலைதளங்களுக்குச் சென்று தகவல்களைத் தேடுகிறார்கள். ஆனால் அங்கு கிடைக்கும் தகவல்களோ குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. நம்பகமான தகவலைப் பெறுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். சிறந்த இக்கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் AskIITMமூலம் ஆர்வமுடன் பதில் அளிப்பது மகிழ்ச்சி தருகிறது. ஐஐடி மெட்ராஸ் மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்துக் கல்விக்கும் இது ஒரு தொடக்கப் பயணமாக அமையும் என நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டார்.

    இக்கல்வி நிறுவனம் தொடர்பான கேள்விகளை எவரும் கேட்க இணையதளத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழுவால் அக்கேள்விகளுக்கு 48 மணி நேரத்தில் பதில் அளிக்கப்படும். கேள்வி கேட்போருக்கான பதில் இமெயில் மூலமோ, வாட்ஸ்அப் வாயிலாகவோ அல்லது இரண்டிலுமோ வழங்கப்படும். பிற மாணவர்கள் பயனடையும் வகையில் இணையதளத்திலும் அக்கேள்விகள் இடம்பெறும்  என்று ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது
    Published by:Salanraj R
    First published:

    Tags: Chennai IIT, IIT Madras

    அடுத்த செய்தி