Home /News /education /

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ரூ.5 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ரூ.5 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள்

சென்னை மாநகராட்சிப் பள்ளி

சென்னை மாநகராட்சிப் பள்ளி

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நிறைவு - 5 கோடி செலவில் சிசிடிவி அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai |
சென்னை மாநகராட்சியில் வசிக்கும் எளிய குழந்தைகளுக்கு விலையில்லா கல்வியை வழங்கும் நோக்கில் பெருநகர சென்னை மாநகராட்சியின் நிர்வாகத்தின் கீழ் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
119 ஆரம்ப பள்ளிகள், 92 நடுநிலை பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 32 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இதில், மாணவர்களின் பாதுகாப்புக்காக பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என கடந்த பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்திருந்தார். இதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மட்டும் முதற்கட்டமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி 90 நடுநிலைப்பள்ளி, 37 மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 29 உயர்நிலைப் பள்ளிகள் உட்பட 156 பள்ளிகளில் 5.4 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் வகுப்பறைகள் தவிர்த்து நுழைவுவாயில், மைதானம், வராண்டா, மற்றும் இதர பகுதிகள் என ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தது நான்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதையும் வாசிக்கஅங்கீகாரம் கிடைத்துவிட்டது... பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு நரிக்குறவர்கள் மகிழ்ச்சி

மேலும், 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் இயங்குவதை பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம், பள்ளியில் மாணவ மாணவிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Published by:Salanraj R
First published:

Tags: CCTV, Chennai, Tn schools

அடுத்த செய்தி