Home /News /education /

நாளை நீட் தேர்வு.. எதற்கெல்லாம் அனுமதி? எவற்றுக்கெல்லாம் தடை? முழு தகவல்

நாளை நீட் தேர்வு.. எதற்கெல்லாம் அனுமதி? எவற்றுக்கெல்லாம் தடை? முழு தகவல்

நீட் தேர்வு

நீட் தேர்வு

செருப்புகள், குறைந்த குதிகால் கொண்ட செருப்புகள் அனுமதிக்கப்படும். ஷூக்கள் அணிய அனுமதியில்லை. 

    இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை நாடு முழுவது நடைபெறுகிறது. 18 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதில் 90% மேற்பட்டோர் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துள்ளதாவதும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

    முறைகேடுகளை தடுக்கும் பொருட்டும், உண்மைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டும், நீட் தேர்வுக்கு மிகக் கடுமையான நெறிமுறைகளை தேர்வு முகமை வகுத்துள்ளது.

    அதன்படி, தேர்வு மையத்தினுள் கீழ் கண்ட பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

    1. எழுதிய அல்லது அச்சடித்த பாட புத்தக பக்கங்கள், துண்டு தாள்கள், ஜியோமெட்ரி/பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பைகள், கால்குலேட்டர்,பேனா, ஸ்கேல் , எழுது அட்டை, பென் டிரைவு, அழிப்பான்,லாக் அட்டவனை, மின்னணு பேனா, ஸ்கேனர் முதலியவை.

    2. தொலை தொடர் சாதனங்களான அலைபேசி, புளூடூத், ஹெட்போன், மைக்ரோபோன்,பேஜர், ஹெல்த் பேண்ட் போன்றவை

    3. பணப்பை, பாதுகாப்பு கண்ணாடி, கைப்பை, பெல்ட், தொப்பி போன்ற பிற பொருட்கள்.

    4, கடிகாரம்/கைக்கடிகாரம், காப்பு, புகைப்பட கருவி.

    5. அனைத்து வகை ஆபரணங்கள்.

    6. உணவுப் பொருட்கள்

    7. நேர்மையற்ற செயலுக்கு மறைத்து பயன்படுத்தப்படும் சாதனங்கள் - மைக்ரோ சிப், புகைப்பட கருவி, புளூ டூத் போன்றவை.

    இதையும் வாசிக்க:  நீட் தேர்வர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் 'ஒயோ' நிறுவனம்

    தேர்வு மையத்தினுள் எக்காரணம் கொண்டும் மேற்கொண்ட பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வர்கள் தேர்வு மையத்தினுள் நுழையும் முன்பு உயர் உணர்திறன் கொண்ட உலோக உணர்வி பயன்படுத்தி விரிவான கட்டாய சோதனைக்குட்படுத்தப்படுவர். மூடப்பட்ட அறையில் பெண் அலுவலர்களைக் கொண்டு பெண் தேர்வர்கள் சோதனைக்குட்படுத்தப்படுவர்.  இதுதொடர்பான விரிவான அறிவுரைகள் தேர்வு மையத்தில் சோதனையில் ஈடுபடும் பெண் அலுவலர் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    தேர்வரின் உடமைகள்/பொருட்களை வைத்துக் கொள்ள எந்த ஏற்பாடும் செய்யப்பட மாட்டாது என்று தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    உடை தொடர்பான நெறிமுறைகள்(NEET Dress Code) 

    1.முழுக்கை ஆடைகளுக்கு முற்றிலும் அனுமதியில்லை. உலோக உணர்வி சோதனைக்கு இடையூறு ஏற்படாத வகையில் வெளிர்நிற அரைக்கை ஆடைகளை அணியலாம்.

    2. இருந்தாலும், கலாச்சார/ பாரம்பரிய உடை அணிய நேரிட்டால், சோதனை செய்வதற்கு ஏதுவாக,  இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக  தேர்வு மையத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

    3. செருப்புகள், குறைந்த குதிகால் கொண்ட செருப்புகள் அனுமதிக்கப்படும். ஷூக்கள் அணிய அனுமதியில்லை.

    4. உடைநெறி தொடர்பான தேசிய தேர்வு முகமையின் அறிவுரைகளை தேர்வர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.

    இதையும் வாசிக்க:  NEET 2022 : நீட் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள்

    தேர்வு நடைபெறும் நாள்: 17-07-2022

    நேரம்: பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.20 மணி வரை 

    பேனா மற்றும் பேப்பர் முறையில் தேர்வு இருக்கும். 
    Published by:Salanraj R
    First published:

    Tags: Neet, Neet Exam

    அடுத்த செய்தி