முகப்பு /செய்தி /கல்வி / நாடு முழுவதும் 10,12ம் வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கு பொது மதிப்பீடு: மத்திய அரசு தீவிரம்

நாடு முழுவதும் 10,12ம் வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கு பொது மதிப்பீடு: மத்திய அரசு தீவிரம்

 காட்சிப்  படம்

காட்சிப் படம்

மதிப்பீட்டு அளவுகள் வெவ்வேறு  அளவில் இருப்பதால்  மாணவர்களின் கற்றல் முடிவுகளை சமநிலைப்படுத்த முடியாத சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai |

2020 புதிய தேசியக் கல்வி கொள்கையின்படி, 10 மற்றும் 12வது வகுப்புகளில் நாட்டில் உள்ள அனைத்து பள்ளி வாரியங்களுக்கும் பொதுவான மதிப்பீட்டு முறையை செயல்படுத்த மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவியல், மாநில கல்வி வாரியம், இடைநிலைக் கல்வி  வாரியம் (CBSE),  இந்திய இடைநிலைக் கல்வி சபை (ICSE) என பல்வேறு வாரியங்கள் உயர்நிலை  மற்றும் மேல்நிலை பள்ளி வகுப்புகளை வழங்கி வருகின்றன. மதிப்பீட்டு அளவுகள் வெவ்வேறு  அளவில் இருப்பதால்  மாணவர்களின் கற்றல் முடிவுகளை சமநிலைப்படுத்த முடியாத சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக, வெளியிடப்பட்ட புதிய தேசியக் கல்வி கொள்கையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பள்ளி வாரியங்களுக்கான மாணவர்களுக்கான மதிப்பாய்வுக்கு வழிகாட்டும் நெறிகளை அமைக்கும் மையமாக   (PARAKH - Performance Assessment, Review, and Analysis of Knowledge for Holistic Development) என்ற நிலையான அமைப்பு உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து பள்ளி வாரியங்களுக்கு இடையேயான கற்றல் அளவை (Academic Standards) சமநிலைபடுத்தும் கருவியாக  செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையியல், இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, அனைத்து மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமங்கள் (SCERT)  மற்றும்  மாநில கல்வி வாரியங்கள் அதிகாரிகளிடையே, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் (NCERT) கலந்தாய்வு  நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுளளது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் இந்த கலந்தாய்வயில், மாநிலங்களிடம்  இருந்து  பல்வேறு  கருத்துக்கள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. உதாரணமாக, வாரியத் தேர்வுகளில் பல பாடங்களை தேர்வு செய்யும் சுதந்திரம், ஆண்டுக்கு இரண்டு முறை  வாய்ப்புகள் வழங்கப்பட்டு அதில் மிகச்சிறந்த  மதிப்பெண்களை தேர்வு செய்யவது  போன்ற புதிய தேசியக் கல்விக்  பல்வேறு  மதிப்பீடு முறை மாற்றங்களை அநேக மாநிலங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றதாக கூறப்படுகிறது.

இதையும் வாசிக்க: இஸ்ரோவில் பணிபுரிய என்ன படிக்க வேண்டும்? எங்கு படிக்க வேண்டும்?

அதே போன்று, 10, 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகளில்  (standard level மற்றும் higher level) என்ற இரண்டு நிலைகளில் கணிதப் பாடத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்ற கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை மாநில அரசுகள் அதிகம் கவனத்தில் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதையும் வாசிக்க: 'நான் முதல்வன்' இணையதளத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

புதிதாக உருவாக்கப்படும் 'PARAKH'   மையம் மத்தியக் கல்வி  அமைச்சகத்தின் கீழ் ஓர் தரஅளவை நிர்ணயிக்கும் அமைப்பாக செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

First published:

Tags: 10th Exam, 12th exam, Education