இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான 2023 ஆம் ஆண்டுகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு தேதிகளை யுஜிசி அறிவித்துள்ளது.
இதில் இளங்கலைப் படிப்புகளுக்கான Cuet UG தேர்வு 2023 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என்றும் அதனைத் தொடர்ந்து தேர்வு 2023, 21 மே முதல் 31 மே வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதுகலைப் படிப்புகளுக்கான Cuet PG நுழைவுத்தேர்வு ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் நடைபெறும். Cuet UG நுழைவுத்தேர்வு முடிவு ஜூன் மூன்றாம் வாரத்தில் CUET PG நுழைவுத்தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்திலும் வெளியிடப்படும்.
ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, அச்சாம், பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி மற்றும் உருது ஆகிய மொழிகளில் இத்தேர்வு நடைபெற உள்ளது.
Also Read : மாதம் ரூ.80,000 சம்பளத்தில் உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் பணி
2023-ம் ஆண்டு ஜூலைக்குள் மாணவர் சேர்க்கையை முடித்து அடுத்தாண்டு ஆகஸ்ட் 1ந் தேதி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entrance Exam, University