Home /News /education /

தமிழகத்திற்கு கல்விக்கான மத்திய அரசின் நிதி குறைப்பு!

தமிழகத்திற்கு கல்விக்கான மத்திய அரசின் நிதி குறைப்பு!

பள்ளி தேர்வு

பள்ளி தேர்வு

கொரோனா காலக்கட்டத்தில் கல்விச்சூழல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கல்விக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த கல்விதிட்டம் சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதி 2019-2020ம் ஆண்டில் ரூ.3,275 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2020-2021 ஆண்டிற்கு ரூ.3,186 கோடியாக குறைத்து ஒதுக்கப்பட்டுள்ளது.  அதன்படி, கடந்த ஆண்டை விட ரூ.89 கோடி குறைத்து மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

கொரோனா காலக்கட்டத்தில் கல்விச்சூழல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கல்விக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கல்விச்சார்ந்த திட்டங்களுக்கென்று அனைத்து மாநிலங்களுக்கும் சமக்ரசிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்கிறது.

இதில் பள்ளி கட்டங்கள் கட்டுவது, பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்குவது, ஆசிரியர்களுக்கான பல்வேறு பயிற்சிகள் வழங்குவது, பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைப்பது உள்ளிட்டவைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதி செலவிடப்படுகிறது .

Also read... சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் தற்கொலை

தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு முதல் சமக்ரா சிக்ஷா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்,

2018 - 2019ல் - ரூ.2,837 கோடியும்,

2019 - 2020ல் - ரூ.3,275 கோடியும் ஒதுக்கப்பட்ட நிலையில்,

2020-2021ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு 2020ம் ஆண்டை ஒப்பிடுகையில் ரூ.89 கோடி குறைக்கப்பட்டு ரூ.3,186கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலக்கட்டத்தில் பிரதானமாக பாதிக்கப்பட்டது கல்வித்துறையாகும். இத்தகைய சூழலில் கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்களுக்கான கற்றல் இழப்புகளை செயல்படுத்த வேண்டி பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டிய காலக்கட்டத்தில் மத்திய அரசு நிதியை குறைத்து ஒதுக்கீடு செய்துள்ளது.
Published by:Esakki Raja
First published:

Tags: Central govt, Education

அடுத்த செய்தி